துருவ் ஜுரெல் சதம் * இந்திய 'ஏ' திணறல் ஆட்டம்
பெங்களூரு: இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்கா 'ஏ' அணி, இரண்டு போட்டிகள் (நான்கு நாள்) கொண்ட அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் இந்தியா 'ஏ' வென்றது. இரண்டாவது போட்டி நேற்று பெங்களூருவில் துவங்கியது.
'டாஸ்' வென்ற தென் ஆப்ரிக்கா 'ஏ' அணி கேப்டன் ஆக்கர்மன், பீல்டிங் தேர்வு செய்தார்.
துருவ் நம்பிக்கை
இந்தியா 'ஏ' அணிக்கு லோகேஷ் ராகுல் (19), அபிமன்யு ஈஸ்வரன் ஜோடி (0) சுமார் துவக்கம் தந்தது. சாய் சுதர்சன் 17, தேவ்தத் படிக்கல் 5 ரன் எடுக்க, கேப்டன் ரிஷாப் பன்ட் 24 ரன் எடுத்தார்.
ஒருபக்கம் விக்கெட் சரிந்தாலும், உறுதியான ஆட்டத்தை வெளிப்படுத்திய துருவ் ஜுரெல், சதம் கடந்தார். ஹர்ஷ் துபே (14), ஆகாஷ் தீப் (0) நிலைக்கவில்லை. குல்தீப் யாதவ் 20, சிராஜ் 15 ரன் எடுத்து உதவினர்.
இந்திய 'ஏ' அணி முதல் இன்னிங்சில் 255 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. 132 ரன்னுடன் துருவ் ஜுரெல் அவுட்டாகாமல் இருந்தார்.
தென் ஆப்ரிக்கா 'ஏ' அணி சார்பில் தியன் வான் 4, சுப்ராயென் 2, டிஷெப்கோ 2 விக்கெட் சாய்த்தனர்.
மேலும்
-
ஓட்டுக்கு பணம் கொடுப்பவர் பாவி; காசுக்கு ஓட்டு போடுபவர் தேசத்துரோகி; சாபமிடுகிறார் சீமான்
-
'குட்கா' பறிமுதல்
-
துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணனுடன் புதுச்சேரி பல்கலை., துணைவேந்தர் சந்திப்பு
-
காவல் உதவி செயலி பதிவிறக்கம் செய்தோர் 13.35 லட்சம் பேர்; பயன்படுத்துவோர் 8.45 லட்சம் பேர்
-
ஜேஎன்யு மாணவர் தேர்தல்: இடதுசாரி மாணவர் அமைப்பு வெற்றி
-
ரத்தத்தில் சர்க்கரை அளவை எளிதாக அறிய சென்னை ஐ.ஐ.டி.,யில் புதிய கருவி உருவாக்கம்