பாலாலயம்

வாடிப்பட்டி: துவரிமான் அருகே கொடிமங்கலத்தில் கன்னிமார் காமாட்சி அம்மன் கோயில் உள்ளது.

இக்கோயிலில் கருப்பண்ணசுவாமி, ஆகாச கருப்புசுவாமி, சோணைசுவாமி, பெரியநாயகி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்கள் உள்ளன. 13 ஆண்டுகளுக்குப் பின் கும்பாபிஷேக திருப்பணிகளுக்கான பாலாலயம் நடந்தது. சிவாச்சார்யார் ராமமூர்த்தி தலைமையில் கணபதி ஹோமம் யாகசாலை பூஜைகள் நடந்தன. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. அறநிலையத்துறை செயல் அலுவலர் இளவரசி, ஆய்வாளர் ஜெயலட்சுமி, திருப்பணி குழுவினர் பங்கேற்றனர்.

Advertisement