மசோதாக்கள் குறித்த குற்றச்சாட்டுகள் உண்மையற்றவை: கவர்னர் மாளிகை

12

சென்னை : மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் கவர்னர் தாமதம் செய்கிறார் மற்றும் தமிழக மக்களின் நலனுக்கு எதிராக அவரது நடவடிக்கைகள் உள்ளன ஆகிய குற்றச்சாட்டுகள் உண்மைக்கு மாறானது. ஆதாரமற்றது என கவர்னர் மாளிகை தெரிவித்துள்ளது.


இது தொடர்பாக கவர்னர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழக சட்டசபையால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் கவர்னர் தாமதம் செய்து வருவதாகவும், அவரது நடவடிக்கைகள் தமிழக மக்களின் நலனுக்கு எதிரானவை எனவும் சில ஆதாரமற்ற மற்றும் உண்மைக்கு மாறான குற்றச்சாட்டுகள் பொதுவில் முன் வைக்கப்பட்டுள்ளன.

பரிசீலனை



@block_P@2025 அக்டோபர் 31 வரை மொத்தம் 211 மசோதாக்கள் கிடைத்துள்ளன. இதில் 81 சதவீத மசோதாக்களுக்கு கவர்னர் அங்கீகாரம் வழங்கியுள்ளார். அவற்றில் 95 சதவீத மசோதாக்கள் மூன்று மாதங்களுக்குள் அங்கீகரிக்கப்பட்டவை. block_P


@quote@மேலும் 13 சதவீத மசோதாக்கள் ஜனாதிபதியின் பரிசீலனைக்காக அனுப்பப்பட்டுள்ளன; இதில் பெரும்பாலானவை மாநில அரசின் பரிந்துரையின் பேரில் அனுப்பப்பட்டவை. quote


மீதமுள்ள எட்டு மசோதாக்கள் அக்டோபர் மாத இறுதி வாரத்தில் வந்தவை. அவை இன்னும் பரிசீலனையில் உள்ளன.



ஆனால் இந்த விவரங்கள் சமூக ஊடகங்களிலும் பொது இடங்களிலும் கூறப்படும் குற்றச்சாட்டுகள் பொய் என நிரூபிக்கும்.

விதிகளுக்கு முரணானவை



சட்டசபைக்கு திருப்பி அனுப்பப்பட்டு சட்டசபையால் மீண்டும் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளன. 10 மசோதாக்கள் கவர்னரால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து முடிவு அரசிடம் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், இந்த மசோதாக்கள் மீண்டும் சட்டசபையால் நிறைவேற்றப்பட்டு சமர்ப்பிக்கப்பட்டபோது, ​​அவை யுஜிசி விதிகளுக்கு முரணானவை. சட்டசபையின் அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்டவை என்பதால், அவற்றை ஜனாதிபதியின் பரிசீலனைக்காக கவர்னர் அனுப்பி வைத்தார்.



@block_Y@

கடமை

சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்தவும், தமிழக மக்களின் நலன்களைப் பாதுகாக்கவும் கவர்னர் ஒவ்வொரு மசோதாவையும் ஆய்வு செய்துள்ளார். அரசியலமைப்பின் விதிகளின்படி கவர்னர் செயல்பட்டு வருகிறார். மாநில மக்களுக்கு மிகுந்த நேர்மையுடனும், வெளிப்படைத்தன்மையுடனும், அர்ப்பணிப்புடனும், ஜனநாயக செயல்முறைகளுக்கு உட்பட்டு, தனது அரசியலமைப்பு கடமைகளை செய்து வருகிறார். அனைத்து சட்டங்களும் அரசியலமைப்பிற்கு உட்படுவதை உறுதி செய்வதற்கு கவர்னர் கடமைப்பட்டுள்ளார். block_Y



தமிழ் பாரம்பரியம், கலை, இலக்கியம், ஆன்மிகம் ஆகியவற்றை முன்னிறுத்தும் முயற்சிகளை கவர்னர் தொடர்ந்து ஆதரித்து வருகிறார் . தமிழக மக்களின் நலனுக்காக, அரசியலமைப்பின் வரம்புக்குள் பொறுப்புடன் செயல்படுவேன் என கவர்னர் ஆர். என். ரவி தெரிவித்துள்ளார். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement