மாற்றுத்திறனாளிகள் பணியை பறிக்கும் அரசாணையை திரும்ப பெற கோரிக்கை
கோவை: மாற்றுத்திறனாளிகள் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கும் அரசாணை எண்: 24ஐ அரசு திரும்பப்பெறுமாறு, தேசிய பார்வையற்றோர் இணையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இணையத்தின் தென்னிந்திய திட்ட இயக்குனர் மனோகரன் கூறியதாவது:
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, அக்., 31ம் தேதி அரசாணை எண்: 24ஐ வெளியிட்டது. 2008 முதல் அரசுத் துறைகளில் தற்காலிகமாக பணிபுரியும் மாற்றுத்திறனாளிகளுக்கு, தேர்வு நடத்தி பணி நிரந்தரம் செய்யப்படுவர் என, அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது; இது முற்றிலும் முரண்பாடானாது. 2008ல் அப்போதைய முதல்வர் கருணாநிதி, அரசாணை எண்:151ஐ வெளியிட்டார். அ தன்படி அரசு துறைகளில் பார்வை மாற்றுத்திறனாளிகள் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்ட, மாற்றுத்திறனாளிகள் பணிபுரிந்து வருகின்றனர்.
இதில் தற்காலிகமாக பணிபுரிபவர்களுக்கு தேர்வு நடத்துவது என்பது, மாற்றுத்திறனாளிகள் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கி, மன உளைச்சலுக்கு தள்ளுகிறது.
இந்த அரசாணையின்படி நடத்தப்படும் தேர்வு முறை, 25 வயது நபருடன், 50 வயது கடந்தவர்களை ஓடச்சொல்லி, அவர்களை கீழே தள்ளி அரசு வேடிக்கை பார்ப்பது போல் அமைந்துள்ளது.
ஏற்கனவே, வேலை தொடர்பான அரசாணை எண்:21 என்பது, பார்வை மாற்றுத்திறனாளிகளை கேவலமாக சித்தரித்தது. அவல நிலைக்கு தள்ளப்பட்டதால், கோர்ட்டை அணுகினோம். அந்த அரசாணையை அரசு திரும்ப பெற்றது. 15 நாட்களுக்குள் அரசாணை: 24ஐயும் அரசு திரும்பப் பெற வேண்டும். தவறினால் கோர்ட்டை அணுகுவோம். இவ்வாறு, அவர் கூறினார்.
மேலும்
-
வீடு மாறினால் ஓட்டு உண்டா; என்னென்ன ஆவணம் தேவை?: வாக்காளர் பட்டியல் திருத்த பணியில் கேள்விகள் ஏராளம்
-
ஆப்கனில் ஒரே வாரத்தில் 3 முறை நிலநடுக்கம்; பொதுமக்கள் பீதி
-
வளர்ச்சிப் பாதையில் வேகமாக முன்னேறும் இந்தியா: 4 வந்தே பாரத் ரயில்களை தொடங்கி வைத்த பின் பிரதமர் மோடி பேச்சு
-
வார இறுதியில் உயர்ந்த தங்கம் விலை; சவரனுக்கு ரூ.240 அதிகரிப்பு
-
அமெரிக்காவில் கவர்னர் தேர்தலில் போட்டியிடுகிறார் விவேக் ராமசாமி; அதிபர் டிரம்ப் அறிவிப்பு
-
மாறி வரும் தேவைகளுக்கு ஏற்ப வீட்டில் ஒயரிங் அமைப்புகள் இருக்கணும்!