தலைமை தேர்தல் கமிஷனருக்கு பிரியங்கா மிரட்டல்: பீஹார் பிரசாரத்தில் சர்ச்சை
பாட்னா; பணியில் இருந்து நீங்கள் நிம்மதியாக ஓய்வு பெற முடியாது என்று தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமாருக்கு காங்கிரஸ் தலைவர் பிரியங்கா மிரட்டல் விடுத்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பீஹார் சட்டசபை முதல் கட்ட ஓட்டுப்பதிவு நிறைவு பெற்றுவிட்ட நிலையில் அனைத்துக் கட்சிகளின் கவனமும், 2ம் கட்ட ஓட்டுப்பதிவை நோக்கி நகர ஆரம்பித்துவிட்டது. 2ம் கட்டமாக தேர்தல் நடக்கும் தொகுதிகளில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள் சூறாவளி பிரசாரத்தில் இறங்கி உள்ளன.
இந் நிலையில், ரெகா என்ற பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா பேசியதாவது;
ஞானேஷ்குமார்... நீங்கள் நிம்மதியாக பணியில் இருந்து ஓய்வு பெற்றுவிடலாம் என்று நினைக்கிறீர்கள். அது ஒருபோதும் நடக்காது. பொதுமக்களே, ஞானேஷ்குமார் என்ற இந்த பெயரை எக்காரணம் கொண்டும் மறந்துவிடாதீர்கள்.
ஹரியானாவில் வாக்காளர்கள் ஏமாற்றப்பட்டதை அவர்கள் ஒரு போதும் மன்னிக்க மாட்டார்கள்.
இவ்வாறு பிரியங்கா பேசினார்.
பிரசாத்தின் போது தேர்தல் கமிஷனர்களாக அவருடன் (ஞானேஷ்குமார்) பணியாற்றும் எஸ்.எஸ். சந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோர் பெயர்களை குறிப்பிட்ட பிரியங்கா, அவர்களது பெயர்களையும் மறந்துவிடாதீர்கள் என்று குறிப்பிட்டார்.
இந்த தலைமை நீதிபதி ஹவாய் தனக்கு எந்தப் பங்கும் இல்லை என்பதைப் போல உள்ளார்
நாட்டில் அத்திபூத்தது போல தன்கடமையை திறம்பட செய்யும் ஆர்வமுள்ள தேர்தல் கமிஷனர் பணி நிறைவு பெறும்போது நிறைந்த மனநிறைவுடன் நிம்மதியாக ஓய்வுபெறுவார் .இதில் எந்த சந்தேகமும் பிரியங்காவுக்கு வேண்டாம் .
should know that both Indira Gandhi
தனது குடும்பத்திற்கு மட்டும் தான் எல்லா உரிமையும் உள்ளது போல. இங்கே இத்தாலிய ஆட்சி நடக்கவில்லை.
அண்ணன் தான் என்று நினைத்தால் தங்கையும்.அதே மாதிரி இருக்கிறார்
தலைவனின் அக்கா
வாக்கு இழந்தவன் எவனும் இது வரை தேர்தல் ஆணையத்தை தொடர்பு கொண்டதாக தெரியவில்லை. சரி ஏதாவது ஒரு தனியார் தொலைக்காட்சி சேனலில் சொல்லலாம், வீடியோ எடுத்து முகநூலில் வெளியிடலாம், இல்லை நீதிமன்றம் செல்லலாம். ஆனால் எதுவும் நடக்கவில்லை. அப்படியிருக்க இந்த அம்மா எதுக்கு கூவுது ?
அரசு அதிகாரியை மிரட்டிய குற்றத்திற்கு ஓரு வழக்கு தொடர வேண்டும்
குடும்ப வாரிசு திருட மட்டும் தான் தெரியும். அதை மறைக்க ஸ்டாலினிடம் பயிற்சி எடுத்து கொள்ள வேண்டும். அம்மையார் வேண்டுமானால் கன்னிமொழியிடம் கற்று கொள்ளாலாம்.
அவரவர் படித்து பட்டம் பெற்று ஐஏஎஸ் ஐபிஎஸ் என்று கஷ்டப்பட்டு படித்து அரசின் உயர் பதவிகளுக்கு வருகின்றனர். ஆனால் சில கேடுகெட்ட அரசியல் வியாதிகள் அவர்களின் வாரிசுகள் எந்த படிப்பறிவோ பொது அறிவோ இன்றி வாய்க்கு வந்ததை பேசி திரிகின்றன.
60 வருசமாக காங்கிரஸ் எதிராக மாநில கட்சிகள், இனி பிஜேபி எதிராக மாநில காட்சிகள் . அவ்ளோதான்
ஆனாலும் உமக்கு 200 ரூவாதான்.