ஃபோரக்ஸ் காத்து நிற்கும் ரிசர்வ் வங்கி

ரி சர்வ் வங்கி மீண்டும் ரூபாயின் பாதுகாவலனாக உருவெடுத்துள்ளது. 88.80 என்ற இலக்கை அது தக்கவைத்துக் கொண்டுள்ளது. இது, ரூபாய் மேலும் சரிவதற்கு ரிசர்வ் வங்கி இடம் கொடுக்கத் தயாராகஇல்லை எனும் ஒரு தெளிவான செய்தியைச் சொல்கிறது.

ரிசர்வ் வங்கியின் நிலையான பாதுகாப்பின் தாக்கம் வியாழக்கிழமை தெரிந்தது, ஏனெனில் ரூபாய் ஸ்திரமாக இருந்தது. முந்தைய 88.65 என்பதற்கு எதிராக 88.63 ஆக முடிவடைந்தது.

மற்ற காரணிகளும் பலத்தை அளித்து, ரூபாய்க்குத் தேவையான ஸ்திரத்தன்மையைக் கொடுத்தன.

இந்த வாரம், கச்சா எண்ணெய் விலை 1.10 சதவீதம் வரை குறைந்தது. இது இந்தியாவின் இறக்குமதி செலவில் அழுத்தத்தைக் குறைத்தது. குறைந்த எரிசக்திச் செலவுகள், நடப்புக் கணக்கு இருப்பை மேம்படுத்துவதோடு, வெளிப்புற பாதிப்புகளையும் குறைக்கும். இதனால் நாணயத்திற்குத் தேவையான நிவாரணம் கிடைக்கிறது.

இந்தியா-அமெரிக்கா வர்த்தகப் பேச்சுகள் சீராக முன்னேறி வருகின்றன. இது ரூபாய்க்கான நடுத்தர கால ஆதரவுக்கான நம்பிக்கையை வழங்குகிறது.

அமெரிக்க அரசாங்கத்தின் பணிநிறுத்தம் அமெரிக்க பொருளாதாரத்தின் பலவீனத்தை கூட்டுகிறது, மற்றும் டாலரின் உத்வேகத்தைக் குறைக்கிறது.

கண்ணோட்டம்: ரிசர்வ் வங்கி 88.80 என்ற இலக்கை இரண்டு முறை வெற்றிகரமாகத் தற்காத்து உள்ளது.

இது ஒரு வலுவான எதிர்ப்பு மண்டலமாக இருக்கிறது. அதே நேரத்தில், இப்போது ஆதரவு 88.50 - 88.60ல் உள்ளது. இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்தில் ஒரு திருப்புமுனை ஏற்பட்டால், அது 88.40 க்குக் கீழே ஒரு தீர்க்கமான நகர்வைத் துாண்டும், இது 87.50-87.70 ஐ நோக்கிய சாத்தியமான உயர்வுக்கு வழி வகுக்கும்.

Advertisement