அமெரிக்காவில் கவர்னர் தேர்தலில் போட்டியிடுகிறார் விவேக் ராமசாமி; அதிபர் டிரம்ப் அறிவிப்பு
வாஷிங்டன்: குடியரசு கட்சியை சேர்ந்தவரும், இந்திய வம்சாவளி தொழிலதிபருமான விவேக் ராமசாமி ஓஹியோ மாநிலத்தின் கவர்னர் தேர்தலில் போட்டியிடுகிறார் என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
அமெரிக்காவின் ஓஹியோ மாநிலத்தின் அடுத்த கவர்னரை தேர்ந்தெடுப்பதற்காக 2026ம் ஆண்டு நவம்பர் 3ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தற்போதைய குடியரசுக் கட்சி கவர்னர் மைக் டிவைன் பதவிக்காலம் இரண்டாவது முறையாக முடிவடைய உள்ளது. அவர் தொடர்ந்து மூன்றாவது முறையாக போட்டியிட தகுதியற்றவர். தேர்தலில் வெற்றி பெறுபவர் ஜனவரி 11ம் தேதி, 2027ம் ஆண்டு பதவியேற்பார். அமெரிக்காவின் வழக்கத்தின் படி தேர்தலுக்கு ஒராண்டுக்கு முன்னதாகவே வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படும்.
அந்தவகையில், குடியரசு கட்சியை சேர்ந்தவரும், இந்திய வம்சாவளியுமான விவேக் ராமசாமி ஓஹியோ மாநிலத்தின் கவர்னர் தேர்தலில் போட்டியிடுகிறார் என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ''ஓஹியோ மாநிலத்தின் கவர்னராக விவேக் ராமசாமி போட்டியிடுகிறார்.
விவேக்கை எனக்கு நன்றாகத் தெரியும். அவர் திறமை வாய்ந்தவர். அவர் இளம் தலைமுறை மற்றும் மிகவும் புத்திசாலி.
விவேக் ராமசாமி ஒரு நல்ல மனிதர், அவர் நம் நாட்டை உண்மையிலேயே நேசிக்கிறார். உங்கள் அடுத்த கவர்னராக, விவேக் ராமசாமி பொருளாதாரத்தை வளர்க்கவும், வரிகள் மற்றும் விதிமுறைகளைக் குறைக்கவும், புலம் பெயர்ந்தோர் குற்றங்களை நிறுத்தவும், நமது ராணுவத்தை வலுப்படுத்தவும், சட்டம் ஒழுங்கை உறுதி செய்யவும் அயராது போராடுவார்.
விவேக் ராமசாமி ஓஹியோவின் சிறந்த கவர்னராக இருப்பார். மேலும் எனது முழுமையான ஒப்புதலைப் பெறுவார். அவர் உங்களை ஒருபோதும் ஏமாற்ற மாட்டார். இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
யார் இந்த விவேக் ராமசாமி?
* கேரளாவை பூர்விகமாக கொண்ட தமிழர் விவேக் ராமசாமி. இவருக்கு வயது 40.
* இவரது பெற்றோர், கேரளா, பாலக்காடு மாவட்டத்தில் இருந்து அமெரிக்காவின் சின்சினாட்டியில் குடியேறினர்.
* இவர் ஹார்வர்ட் மற்றும் யேல் பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்றவர்.
* குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட்ட விவேக் ராமசாமி, பிறகு அதில் இருந்து பின்வாங்கினார்.
* விவேக் ராமசாமி தொண்டை அறுவை சிகிச்சை நிபுணர் அபூர்வா திவாரியை மணந்தார். இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
வாசகர் கருத்து (8)
Gnana Subramani - Chennai,இந்தியா
08 நவ,2025 - 16:30 Report Abuse
அமெரிக்காவில் பிறந்த ராமசாமி தமிழர். தமிழ் நாட்டில் பிறந்த ஸ்டாலின் தெலுங்கர். சரி தானே 0
0
Reply
Field Marshal - Redmond,இந்தியா
08 நவ,2025 - 14:11 Report Abuse
வடக்குப்பட்டி ராமசாமி என்று நினைத்தால் பாலக்காட்டு பூர்வீகம் 0
0
Reply
karupanasamy - chennai,இந்தியா
08 நவ,2025 - 14:02 Report Abuse
பக்கத்து வாரிசுகள் ராமசாமி நாயக்கன் தான் காரணம்.... கயவன் கலைஞர் டிவியிலும் பேசுவார்கள். 0
0
Reply
Barakat Ali - Medan,இந்தியா
08 நவ,2025 - 13:42 Report Abuse
இவர் ஜனாதிபதி தேர்தலில் இருந்து விலகி டிரம்புக்கு வழி விட்டார் ..... இப்போ கவர்னர் தேர்தலுக்கு போட்டியிடுறார் ....
இதன் மூலம் டிரம்ப் சொல்லும் செய்தி .... ஓகே ... ஓகே .... ஒரு கவர்னரா வேணா இருந்துட்டுப் போ ..... 0
0
Reply
RAMESH KUMAR R V - ,இந்தியா
08 நவ,2025 - 12:08 Report Abuse
வெளியுலகில் கால்பதித்து தனக்கென ஒரு இமேஜ் உருவாக்குவது அவரின் கடின உழைப்பாள் மட்டுமே முடியும். வாழ்த்துக்கள். 0
0
Reply
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
08 நவ,2025 - 11:46 Report Abuse
இன்னும் ஒரு வருடத்தில் இன்னும் என்னவெல்லாமோ நடக்கும். 0
0
Reply
Moorthy - ,இந்தியா
08 நவ,2025 - 10:39 Report Abuse
தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் உள்ளது அதற்குள் டிரம்ப் விவேக் ராமசாமியை வி கே ராமசாமியாக மாற்றாமல் இருந்தால் சரி 0
0
Senthoora - Sydney,இந்தியா
08 நவ,2025 - 10:48Report Abuse
வி கே ராமசாமி பரவாய் இல்லை, TVK ராமசாமியாக மாற்றம் இருந்தா போதும், 0
0
Reply
மேலும்
-
சுதந்திர போராட்ட வீரர், மனைவியுடன் கொலை; வ.தேசத்தில் ஹிந்துக்கள் மீது தொடரும் வன்முறை
-
தேசிய கால்நடை கணக்கெடுப்பு விவரம் அடுத்தாண்டு மார்ச் வெளியிட திட்டம்
-
தொகுதிகளில் குறையும் வாக்காளர்கள் பூத் வாரியாக ஆய்வு செய்யும் அதிகாரிகள்
-
போலி தங்க காசு கொடுத்து ரூ.5 லட்சம் மோசடி
-
ஜெயிலர் மீது தாக்குதல் கைதி மீது புகார்
-
துபாய் தொழிலதிபர் வெட்டி கொலை
Advertisement
Advertisement