கல்லுாரி மாணவிக்கு நீதி கேட்டு பா.ஜ. மகளிரணி ஆர்ப்பாட்டம்
திருப்பூர்: கோவை மாணவி கூட்டு பலாத்காரம் உள்ளிட்ட பெண்கள் மீதான வன்முறையை கண்டித்து திருப்பூரில் பா.ஜ. மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கோவையில் கல்லுாரி மாணவி பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட சம்பவங்களில் தமிழக அரசு பெண்கள் பாதுகாப்பில் காட்டும் மெத்தனத்தைக் கண்டித்து திருப்பூரில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
குமரன் சிலை முன் நடந்த பா.ஜ. மாவட்ட தலைவர் சீனிவாசன் தலைமை வகித்தார். மாவட்ட மகளிர் அணி தலைவர் சுமதி வரவேற்றார். மாநில செயலாளர் மலர்க்கொடி, மகளிர் அணி மாநில செயலாளர் ஜெகதீஸ்வரி சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர்.
மாநில செயற்குழு உறுப்பினர்கள் செந்தில்வேல், பாயின்ட் மணி, சின்னசாமி, நாச்சிமுத்து; மாவட்ட பொது செயலாளர்கள், நடராஜ், அருண், கலாமணி, பொருளாளர் ரவி முன்னிலை வகித்தனர். இதில் திரளாக கலந்து கொண்ட கட்சியினர் மாநில அரசைக் கண்டித்து கோஷமிட்டனர்.
பா.ஜ. மகளிரணி நிர்வாகிகள் கூறுகையில், 'பெண்ணுரிமை, பெண் சுதந்திரம், பெண் முன்னேற்றம் என்றெல்லாம் மேடைக்கு மேடை வாய் பேசும் தி.மு.க. ஆட்சியில் தமிழகம் முழுவதும் பெண்களுக்கு எதிரான வன்முறை, பலாத்காரம் போன்ற சம்பவங்கள் நாளுக்கு நடந்து வருகிறது.
இதனை தடுக்கவும், குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்கவும் திறனின்றி தமிழக அரசு உள்ளது. வீட்டிலும், வெளியிலும் எங்குமே தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பாக இருக்க முடியாத மிக மோசமான சட்டம் ஒழுங்கு தான் தமிழகத்தில் உள்ளது,' என்றனர்.
மேலும்
-
ஈக்வடார் சிறையில் வன்முறை; கைதிகள் 31 பேர் உயிரிழப்பு
-
மாலியில் கடத்தப்பட்ட 5 இந்தியர்களை பாதுகாப்பாக மீட்க நடவடிக்கை; இந்திய தூதரகம்
-
எத்தனை முனை போட்டி வந்தாலும் திமுக கூட்டணி வெற்றி பெறும்: முதல்வர் ஸ்டாலின் பேட்டி
-
தமிழகத்தில் நாளை முதல் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம்
-
பட்டாவில் பெயர் சேர்க்க ரூ.20 ஆயிரம் லஞ்சம்: பெண் விஏஓ கைது!
-
பொதுமக்கள் பாதுகாப்பு கேள்விக்குறி; போலீஸ் குடியிருப்பில் நடந்த கொலை பற்றி அண்ணாமலை ஆவேசம்