'இன்ட்ராக்ட்' தினத்தில் பசுமை விழிப்புணர்வு
திருப்பூர்: திருமுருகன்பூண்டி ரோட்டரி சங்கம் சார்பில், 3 சங்கங்கள் இணைந்து, 'இன்ட்ராக்ட் தினம்' கொண்டாடின.
ரோட்டரி சங்க வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, ரோட்டரி தலைவர் சார்லஸ், தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, சிறுமுகை ரோட்டரி சங்கத்தின் பட்டய தலைவர் எழில்வண்ணன், ரோட்டரி மற்றும் இன்ட்ராக்ட் குறித்து பேசினார். முன்னதாக செயலாளர் மணிவண்ணன், வரவேற்றார்.
அம்மாபாளையம் நகராட்சி நடுநிலைப்பள்ளி இன்ட்ராக்ட் கிளப் தலைவர் பஹீமா பர்வீன், ராக்கி யபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி இன்ட்ராக்ட் கிளப் தலைவர் காவியா, அவிநாசி சாந்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி இன்ட்ராக்ட் கிளப் தலைவர் ஜிஜூ கிருஷ்ணன் ஆகியோர், தங்கள் பள்ளியில் மேற்கொண்ட செயல் திட்டங்களை விளக்கினர்.
இன்ட்ராக்ட் மாணவி சாருஹாசினி தயாரித்த இயற்கை உரம் விற்பனை செய்யப்பட்டு, போலியோ பிளஸ் நிதியில் சேர்க்கப்பட்டது. பசுமையின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில், அம்மா பாளையம் பள்ளி மாணவனர் நரேன்குமார், மவுன மொழி நாடகம் நிகழ்த்தினார். தலைமையாசிரியர்கள் ராமகிருஷ்ணன் (அம்மாபாளையம்), சுஜினிதேவி (ராக்கியாபாளையம்) மற்றும் பெற்றோர் திரளாக பங்கேற்றனர்.
பூண்டி ரோட்டரி கிளப் பொருளாளர் காயத்ரி நன்றி கூறினார்.
மேலும்
-
நிலநடுக்கத்தால் குலுங்கியது அந்தமான் நிகோபர் தீவுகள்; ரிக்டரில் 6 புள்ளிகளாக பதிவு
-
தந்தையின் பிஸ்டலால் நண்பனை சுட்ட 17 வயது பள்ளி மாணவன்; முன் விரோதத்தால் விபரீதம்
-
கோவா அயர்ன்மேன் போட்டி: நீச்சல், ஓட்டம், சைக்கிள் போட்டிகளில் அசத்திய அண்ணாமலை
-
ஒலிம்பிக் கிரிக்கெட் போட்டிக்கு இந்தியா நேரடி தகுதி
-
உத்தராகண்டிற்கு ரூ.8,260 கோடியில் வளர்ச்சி திட்டம்; வெள்ளி விழாவில் பிரதமர் மோடி பரிசு
-
தென்னாப்ரிக்காவில் நடக்கும் ஜி 20 உச்சிமாநாட்டில் பங்கேற்கிறார் பிரதமர் மோடி