நிலநடுக்கத்தால் குலுங்கியது அந்தமான் நிகோபர் தீவுகள்; ரிக்டரில் 6 புள்ளிகளாக பதிவு
புதுடில்லி: அந்தமான் நிகோபர் தீவுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
நிலநடுக்கமானது, இன்று (நவ.9) நண்பகல் 12.06 மணிக்கு ஏற்பட்டதாகவும், ரிக்டர் அளவு கோலில் 6.02 ஆக பதிவாகி உள்ளதாகவும் தேசிய நிலஅதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இதே விவரத்தை ஜெர்மன் நில அதிர்வு மையம் உறுதி செய்து அறிவித்துள்ளது. நில நடுக்கத்தால் ஏதேனும் உயிரிழப்புகள், சேதங்கள் ஏற்பட்டதா என்பது பற்றிய உடனடி விவரங்கள் இல்லை என்றும் தேசிய நில அதிர்வு மையம் கூறியுள்ளது.
அந்தமான் நிகோபர் தீவுகள், அதிக நிலநடுக்கங்கள் பதிவாகும் ஆபத்து நிறைந்த மண்டல பகுதியில் உள்ளது, குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, ஜப்பானின் வடக்கு கடற்கரையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் இன்று பதிவாகி இருக்கிறது. இவாட் மாகாணத்தின் கடற்கரையில் இருந்து கடல்மேற்பரப்பில் இருந்து 10 கிமீ ஆழத்தில் பதிவாகி உள்ளது. இதையடுத்து, முன் எச்சரிக்கையாக சுனாமி அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும்
-
ராகுல் எத்தனை யாத்திரை நடத்தினாலும் ஊடுருவல்காரர்களை பாதுகாக்க முடியாது: அமித்ஷா
-
நிதிஷ் குமார் ஆட்சி முடிவுக்கு வந்து விட்டது; பிரசாந்த் கிஷோர்
-
101வது பிறந்தநாளை கொண்டாடிய திருப்பூர் மூதாட்டி: 7 தலைமுறை உறவுகளுடன் உற்சாக சந்திப்பு
-
கடல்சார் சக்தியாக திகழும் இந்தியா; முப்படை தளபதி பெருமிதம்
-
டீக்கடைகள், தெருமுனைகளில் எஸ்.ஐ.ஆர். விண்ணப்பம் விநியோகம்; 8 அதிகாரிகளுக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ்
-
பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய ஆம் ஆத்மி எம்எல்ஏ ஆஸி.,க்கு தப்பி ஒட்டம்