வந்தே பாரத் ரயிலுக்கு ஈரோட்டில் வரவேற்பு எர்ணாகுளம்-பெங்களூரு இடையில் இயங்கும்

ஈரோடு;கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து பெங்களூரு வரை செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை, குஜராத் மாநிலத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக, பாரத பிரதமர் மோடி நேற்று காலை, 8:00 மணிக்கு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.


இந்த ரயில் மதியம், 1:30 மணிக்கு ஈரோடு வந்தது. ராஜ்யசபா எம்.பி. அந்தியூர் செல்வராஜ், மொடக்குறிச்சி எம்.எல்.ஏ., சரஸ்வதி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் வரவேற்றனர். இந்த ரயில் புதன்கிழமை தவிர ஏனைய நாட்களில் வந்து செல்லும். பெங்களூரில் காலை, 5:10 மணிக்கு புறப்பட்டு எர்ணாகுளத்துக்கு மதியம் 1:50க்கு சென்றடையும். எர்ணாகுளத்தில் இருந்து மதியம், 2:20 மணிக்கு புறப்பட்டு இரவு, 11:00 மணிக்கு பெங்களூர் சென்றடையும்.
வரும், 11 முதல் சேவையை துவங்குகிறது. பெங்களூர், கிருஷ்ணராஜபுரம், சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு, திருச்சூர், எர்ணாகுளத்தில் மட்டும் நின்று செல்லும். ரயில் பயணத்துக்கான முன்பதிவு விரைவில் துவக்கப்படும். இது கேரளாவிற்கு மூன்றாவது வந்தே பாரத் ரயிலாகும். அதேசமயம் கேரளா-தமிழகம்-கர்நாடகாவை இணைக்கும் முதலாவது ரயிலாகும். ரயில் முழுவதும் குளிர்சாதன வசதி கொண்டது. எட்டு பெட்டிகளில், 176 பயணிகள் பயணிக்கலாம். சேலம் ரயில்வே கோட்டத்தில் நான்காவது வந்தே பாரத் ரயில். இதில் மூன்று ஈரோடு வழியாக செல்கின்றன.

Advertisement