கடல்சார் சக்தியாக திகழும் இந்தியா; முப்படை தளபதி பெருமிதம்
சண்டிகர்: ஆசிய கண்டத்தில் ஒரு மிகப்பெரிய சக்தியாக மட்டுமல்லாமல், இந்திய பெருங்கடல் பகுதியில் இந்தியா ஒரு மாபெரும் கடல் சக்தியாக திகழ்வதாக முப்படைகளின் தளபதி அனில் சவுகான் தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் தலைநகர் சண்டிகரில் நடந்த 9வது ராணுவ இலக்கிய விழாவில் முப்படைகளின் தளபதி அனில் சவுகான் பேசினார். அதில், அவர் கூறியதாவது; 20ம் நூற்றாண்டின் புவிசார் அரசியல் நிகழ்வுகளைப் பார்த்தால், இந்தியாவின் பிரிவினை, பாகிஸ்தான் உருவாக்கம், சீனாவுடனான போர் ஆகியவை இந்தியாவை ஒரு கண்டம் அளவிலான கண்ணோட்டத்தை கொண்டிருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
ஆசிய கண்டத்தில் ஒரு மிகப்பெரிய சக்தியாக மட்டுமல்லாமல், இந்திய பெருங்கடல் பகுதியில் இந்தியா ஒரு மாபெரும் கடல் சக்தியாக திகழ்கிறது. இதன் காரணமாக, உலகளவில் நிலவும் பிரச்னைகளுக்கு முதல் கருத்துக்களை பதிவு செய்யும் நாடாகவும், பிற நாடுகளுக்கு விருப்பமான நட்பு நாடாகவும் இந்தியா விளங்கி வருகிறது.
ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக, உலகத்தில் உச்சபட்ச அதிகாரம் என்பது அடிப்படையில் புவியியல் கட்டுப்பாட்டிற்கான போராட்டமாகவே உள்ளது. கடல்கள், கண்டங்கள் என்பதைக் கடந்து, விண்வெளி, சமூக வலைதளங்கள் ஆகியவற்றிற்கு விரிவடைந்துள்ளது. ஒரு நாட்டின் அதிகாரம் என்பது அதன் பரப்பளவை விட, புவியியல் அமைப்பில் அது அமைந்துள்ள இடம் உள்ளிட்ட காரணிகளைப் பொறுத்தே தீர்மானிக்கப்படுகிறது.
உதாரணமாக, ஜிபூட்டி மற்றும் சிங்கப்பூர் ஆகிய 2 சிறிய நாடுகள் உள்ளன. இவை இரண்டும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்ததாக மட்டுமல்லாமல், வர்த்தகத்திலும் முக்கிய பங்காற்றுகின்றன, இவ்வாறு அவர் கூறினார்.
சரியான மதிப்பீடு, அலசல் .......மேலும்
-
வருவாய்த்துறையினரிடம் டிஜிட்டல் கிராப் சர்வே பணியை ஒப்படைக்க ஆலோசனை
-
போலீஸ் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர் தற்கொலை உறவினர்கள் மறியல்: பஸ் கண்ணாடி உடைப்பு
-
உப்பு தண்ணீர் வினியோகம் நெமிலிச்சேரி மக்கள் அவதி
-
நலம் காக்கும் ஸ்டாலின் முகாமில் எச்.எம்.ஐ.எஸ்., தமிழ்நாடு செயலி
-
அரசு பஸ் கண்டக்டர் மாரடைப்பால் இறப்பு
-
தி.மு.க.,வின் அறிவும், உழைப்பும் வாரிசு அரசியலை ஊக்குவித்தது: முன்னாள் அமைச்சர் உதயகுமார் தாக்கு