101வது பிறந்தநாளை கொண்டாடிய திருப்பூர் மூதாட்டி: 7 தலைமுறை உறவுகளுடன் உற்சாக சந்திப்பு
திருப்பூர்: திருப்பூரில், ஏழு தலைமுறை வாரிசுகளுடன், 101 வது பிறந்த நாளை மூதாட்டி குடும்பத்தினருடன் கொண்டாடினர்.
திருப்பூர் ஜீவா காலனியை சேர்ந்தவர் ராமாத்தாள், 100. இவர், 101 வது வயதில் அடியெடுத்து வைக்கும் மூதாட்டிக்கும், குடும்பத்தினர் சார்பில், பிறந்த நாள் விழா இன்று( நவ.,09) கொண்டாடப்பட்டது. இதற்காக ராமாத்தாளின் மகன், மகள் வழி பேரன், பேத்தி, கொள்ளு பேரன், பேத்தி மற்றும் தனது தங்கை வழி குடும்பத்தினர், உறவினர்கள் என, ஏழு தலைமுறைகளை, நுாறுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பங்கேற்றனர். 101 வயதான ராமாத்தாள் பிரம்மாண்ட கேக் வெட்டி பகிர்ந்தார். குடும்பத்தினர் ராமாத்தாளின் காலில் விழுந்து ஆசி பெற்றனர். ஆடல் , பாடல் என உறவினர்கள் மகிழ்ந்து மூதாட்டி ராமாத்தாளையும் மகிழ்ச்சியடைய செய்தனர். தொடர்ந்து, மூதாட்டியுடன் குழு போட்டோ எடுத்தனர்.
இதுகுறித்து மூதாட்டி கூறியதாவது: ஏழு தலைமுறைகளை கண்டது மகிழ்ச்சி அளிக்கிறது. இத்தருணத்தில், அனைவரும் ஒன்று சேர்ந்து இருப்பது போல, எப்போதும் ஒற்றுமையுடனும், உடல் நலத்தோடு, ஆரோக்கியமாக வாழ வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வருவாய்த்துறையினரிடம் டிஜிட்டல் கிராப் சர்வே பணியை ஒப்படைக்க ஆலோசனை
-
போலீஸ் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர் தற்கொலை உறவினர்கள் மறியல்: பஸ் கண்ணாடி உடைப்பு
-
உப்பு தண்ணீர் வினியோகம் நெமிலிச்சேரி மக்கள் அவதி
-
நலம் காக்கும் ஸ்டாலின் முகாமில் எச்.எம்.ஐ.எஸ்., தமிழ்நாடு செயலி
-
அரசு பஸ் கண்டக்டர் மாரடைப்பால் இறப்பு
-
தி.மு.க.,வின் அறிவும், உழைப்பும் வாரிசு அரசியலை ஊக்குவித்தது: முன்னாள் அமைச்சர் உதயகுமார் தாக்கு
Advertisement
Advertisement