நிதிஷ் குமார் ஆட்சி முடிவுக்கு வந்து விட்டது; பிரசாந்த் கிஷோர்
பாட்னா: நிதிஷ்குமார் ஆட்சிக்கு முடிவுக்கு வந்துவிட்டது என்று ஜன் சுராஜ் கட்சியின் நிறுவனரும், பிரபல தேர்தல் வியூக வகுப்பாளருமான பிரசாந்த் கிஷோர் கூறி உள்ளார்.
பீஹார் 2ம் கட்ட ஓட்டுப்பதிவுக்கான தேர்தல் பிரசாரம் இன்று(நவ.9) மாலையுடன் நிறைவு பெற்றது. நவ.11ம் தேதி ஓட்டுப்பதிவுக்கான பணிகளை தேர்தல் கமிஷன் அதிகாரிகள் தொடங்கி உள்ளனர். நவ.14ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகிறது.
இப்படிப்பட்ட சூழலில், ஜன் சுராஜ் கட்சியின் நிறுவனரும், பிரபல தேர்தல் வியூக வகுப்பாளருமான பிரசாந்த் கிஷோர் ஏஎன்ஐ நிறுவனத்திற்கு சிறப்பு நேர்காணல் ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறி உள்ளதாவது;
பீஹாரில் சுதந்திர வரலாற்றில் இதற்கு முன்னதாக, இந்தளவு அதிக ஓட்டு சதவீதம் பதிவாகவில்லை. புரிந்து கொள்ள முடியாத ஒரு விஷயம் நடக்க போகிறது. இதை மக்களால் புரிந்து கொள்ள முடியாது.
முதல்முறையாக, ஒரு புதிய முன்னெடுப்பு ஜன் சுராஜ் கட்சியின் மூலம் தொடங்கப்பட்டு இருக்கிறது. ஆகையால் ஓட்டுப்பதிவு சதவீதம் அதிகரித்துள்ளது. மற்றொரு காரணியும் இதில் அடங்கி இருக்கிறது. அதுதான் புலம்பெயர் தொழிலாளர்கள். இந்த முறை அவர்கள் ஓட்டு போட நினைத்துள்ளனர். அது அவர்களின் வாழ்க்கை முறையை மாற்றக்கூடும் என்று எண்ணி இருக்கலாம்.
நிதிஷ்குமார் ஆட்சி முடிவுக்கு வந்துவிட்டது. அவர் போக போகிறார் (தேர்தலில் தோற்பார் என்பதை கூறுகிறார்). இதை நீங்கள் மறந்துவிட வேண்டாம். பீஹாரில் 65-67 சதவீதம் ஓட்டுகள் ஆட்சிக்கு ஆதரவானவை கிடையாது. அப்படி ஒன்று சாத்தியமே இல்லை. ஆகையால் தேர்தல் முடிவுகள் வரட்டும்.
நீங்கள் அறிவியல்பூர்வமாக தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பை நடத்தாவிட்டால் மக்கள் ஏதேனும் ஒன்றை பேசிக் கொண்டே தான் இருப்பார்கள். ஓட்டுப்போடுவதற்கு முன்னர் கணிப்பை மறந்து விடுங்கள்.
எத்தனை பேர் ஓட்டளிக்க போகிறார்கள் என்று தெரியாத போது, அவர்கள் யாருக்கு ஓட்டளிக்கின்றனர் என்பதை எப்படி நீங்கள் அறிய முடியும்? உங்களின் அனுபவத்தின் அடிப்படையில் பகுப்பாய்வு செய்யும்போது பரவாயில்லை. ஏன் என்றால் அதற்கு எவ்வித அறிவியல் அடிப்படையும் இல்லை.
யாரேனும் ஒருவர் அறிவியல் ரீதியாக கருத்துக் கணிப்பை நடத்தாவிட்டால், முடிவு எப்படி இருக்கும் என்று யாராலும் சொல்ல முடியாது.
இவ்வாறு பிரசாந்த் கிஷோர் பேட்டி அளித்தார்.
Nitishkumar licence will be renewed on 14th Nov.
தேர்தலில் நிற்கவே பயப்படுபவர்கள் அதைச் சொல்லக்கூடாது ..........மேலும்
-
வருவாய்த்துறையினரிடம் டிஜிட்டல் கிராப் சர்வே பணியை ஒப்படைக்க ஆலோசனை
-
போலீஸ் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர் தற்கொலை உறவினர்கள் மறியல்: பஸ் கண்ணாடி உடைப்பு
-
உப்பு தண்ணீர் வினியோகம் நெமிலிச்சேரி மக்கள் அவதி
-
நலம் காக்கும் ஸ்டாலின் முகாமில் எச்.எம்.ஐ.எஸ்., தமிழ்நாடு செயலி
-
அரசு பஸ் கண்டக்டர் மாரடைப்பால் இறப்பு
-
தி.மு.க.,வின் அறிவும், உழைப்பும் வாரிசு அரசியலை ஊக்குவித்தது: முன்னாள் அமைச்சர் உதயகுமார் தாக்கு