ராகுல் எத்தனை யாத்திரை நடத்தினாலும் ஊடுருவல்காரர்களை பாதுகாக்க முடியாது: அமித்ஷா
சசாராம்: '' பாட்னாவில் இருந்து இத்தாலி வரை ராகுல் எத்தனை யாத்திரை நடத்தினாலும் காங்கிரஸ் எம்பி ராகுலால் ஊடுருவல்காரர்களை காப்பாற்ற முடியாது. அவருக்கு பீஹார் இளைஞர்களை பற்றி கவலையில்லை,'' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
பீஹார் சட்டசபைக்கு 2ம் கட்ட தேர்தலை முன்னிட்டு சசாரம் பகுதியில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் அமித்ஷா பேசியதாவது: சோனியா, மன்மோகன், லாலு அதிகாரத்தில் இருந்த போது, நமது மண்ணில் தாக்குதல் நடத்திவிட்டு பயங்கரவாதிகள் தப்பியோடினர். இதில் எந்த சந்தேகமும் இல்லை. மோடி ஆட்சிக்கு வந்த பிறகு தான், உரியில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தப்பட்டது. புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக விமானப்படை மூலம் தாக்குதல் நடத்தினாம். பஹல்காமில், நமது மக்களை , மதத்தைக் கேட்டு பயங்கரவாதிகள் கொன்றதும் அடுத்த 22 நாட்களில் ஆப்பரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானுக்குள் நுழைந்து பயங்கரவாதிகளை கொன்றோம்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு, ஊடுருவல்காரர்களை காப்பாற்ற யாத்திரை ஒன்றை ராகுல் மேற்கொண்டார். அவர் விரும்பினால், பாட்னாவில் இருந்து இத்தாலி வரை எத்தனை யாத்திரை வேண்டுமானாலும் நடத்தட்டும். ஆனால், அவரால் ஊடுருவல்காரர்களை காப்பாற்ற முடியாது. பீஹார் மற்றும் நாட்டில் இருந்து அனைத்து ஊடுருவல்காரர்களை யும் கண்டுபிடித்து வெளியேற்றுவோம். பீஹார் இளைஞர்களை காட்டிலும், வங்கதேச ஊடுருவல்காரர்களை நினைத்து ராகுல் கவலைப்படுகிறார். வாக்காளர் பட்டியலில் இருந்து ஊடுருவல்காரர்கள் நீக்கப்பட்டதால், ஓட்டுத் திருட்டு குறித்து ராகுல் பேசி வருகிறார். இவ்வாறு அமித்ஷா பேசினார்.
வாசகர் கருத்து (12)
பேசும் தமிழன் - ,
10 நவ,2025 - 07:50 Report Abuse
இந்திய நாட்டு மக்கள் யாரும் அவர்களுக்கு ஓட்டு போடுவதில்லை.. அவர்களுக்கு ஓட்டு போடுவதே அந்த ஊடுருவல் ஆட்கள் தான்... அவர்களையும் நாடு கடத்தி விட்டால்... அவர்களுக்கு.... இண்டி கூட்டணிக்கு யார் ஓட்டு போடுவார்கள்.. அதனால் தான் இந்த பதற்றம்.... புலம்பல். 0
0
Reply
Venugopal S - ,
09 நவ,2025 - 22:56 Report Abuse
ஊடுருவல் காரர்களை உள்ளே நுழைய விடாமல் தடுத்தால் ராகுலுக்கு அவர்களை பாதுகாக்க வேண்டிய வேலையே இருக்காதே! 0
0
Reply
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
09 நவ,2025 - 21:56 Report Abuse
உள்துறை, நிர்வாகம், பாதுகாப்பு துறை, எல்லை பாதுகாப்பு, மத்திய ரிசர்வ் போலீஸ், என்று அனைத்து துறைகளும் தூங்கிக் கொண்டு இருக்கும் போல. 0
0
Reply
Priyan Vadanad - Madurai,இந்தியா
09 நவ,2025 - 20:45 Report Abuse
இருந்தால்தானே பாதுகாக்க. இல்லாத ஒன்றை இருப்பதாய் காட்டி.....சே என்ன பொழப்பு. 0
0
Reply
பேசும் தமிழன் - ,
09 நவ,2025 - 19:54 Report Abuse
இண்டி கூட்டணி ஆட்கள் என்ன தான் தில்லுமுல்லுகளை செய்தாலும்... ஊடுருவல் ஆட்களை நாட்டை விட்டு வெளியேற்றுவதில் இருந்து அவர்களை காப்பாற்ற முடியாது... அதை தான் அமித் ஷா அவர்கள் சொல்லி இருக்கிறார். 0
0
Reply
V Venkatachalam, Chennai-87 - Chennai,இந்தியா
09 நவ,2025 - 19:52 Report Abuse
அமித் ஷா அவர்களே ஒரு முக்கியமான விஷயத்தை சொல்ல விட்டுட்டீங்க ஜி. ராகுல் கான் ஊடுருவல் லிஸ்டில் தானே இருக்கார்? உங்க லிஸ்டை சரி பாருங்க ஜி. ராகுல்கானுக்கு ஒரு வளையம் போட்டு வையுங்க ஜி. 0
0
Reply
Barakat Ali - Medan,இந்தியா
09 நவ,2025 - 19:29 Report Abuse
2014 இல் ஊடுருவல்காரர்கள் மூட்டை முடிச்சுக்களுடன் தயாராக இருங்கள் .... .NDA அரசு அமைந்த வுடன் வெளியேற வேண்டியிருக்கும் என்று மோடி பிரச்சாரம் செய்தாரே ???? அப்போது ஆட்சிக்கு வந்தது முதல் என்ன செய்து கொண்டு இருந்தீர்கள் ???? ஊடுருவல்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாதபடி உங்கள் கைகளைக்கட்டிப்போட்டது யார் ???? 0
0
Reply
Nandakumar Naidu. - ,
09 நவ,2025 - 19:16 Report Abuse
முதல் ஓட்டு திருட்டு நடத்தியதே இவர்கள் பரம்பரை தான். ஓட்டு திருட்டை நடத்தி முதல் பிரதமர் ஆனது இவனின் தாத்தா தான். சர்தார் வல்லபாய் படேல் 11 ஓட்டுகள் மற்றும் இவனின் தாத்தா நேரு 1 ஓட்டு. யார் ஓட்டு திருடர்கள்? 0
0
Reply
முருகன் - ,
09 நவ,2025 - 19:11 Report Abuse
ராகுல் என்று ஊடுருவல் ஆட்களை ஆதாரித்தார் 0
0
Reply
Rahim - ,இந்தியா
09 நவ,2025 - 19:05 Report Abuse
தங்களது மத்திய அரசு நிர்வாகத்தின் தோல்வியை ஒப்புக்கொள்கிறார் போல.... 0
0
Reply
மேலும் 2 கருத்துக்கள்...
மேலும்
-
ஈக்வடார் சிறையில் வன்முறை; கைதிகள் 31 பேர் உயிரிழப்பு
-
மாலியில் கடத்தப்பட்ட 5 இந்தியர்களை பாதுகாப்பாக மீட்க நடவடிக்கை; இந்திய தூதரகம்
-
எத்தனை முனை போட்டி வந்தாலும் திமுக கூட்டணி வெற்றி பெறும்: முதல்வர் ஸ்டாலின் பேட்டி
-
தமிழகத்தில் நாளை முதல் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம்
-
பட்டாவில் பெயர் சேர்க்க ரூ.20 ஆயிரம் லஞ்சம்: பெண் விஏஓ கைது!
-
பொதுமக்கள் பாதுகாப்பு கேள்விக்குறி; போலீஸ் குடியிருப்பில் நடந்த கொலை பற்றி அண்ணாமலை ஆவேசம்
Advertisement
Advertisement