குருவாயூரில் முகேஷ் அம்பானி தரிசனம்: மருத்துமனை கட்டுமானத்திற்கு ரூ.15 கோடி நன்கொடை

1

திருச்சூர்: குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணர் கோயிலில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி இன்று தரிசனம் செய்து பின்னர் மருத்துவமனை கட்டுமானத்திற்கு ரூ.15 கோடி நன்கொடை அளித்தார்.
ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி, இன்று கேரளாவில் உள்ள குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணர் கோயிலுக்கு சென்றார். பின்னர் அங்கு முன்மொழியப்பட்ட பல்நோக்கு மருத்துவமனை கட்டுமானத்திற்கு ரூ.15 கோடி வழங்கினார்.
இது குறித்து குருவாயூர் தேவசம் போர்டு பதிவிட்டுள்ளதாவது:

இன்று தொழிலதிபர் முகேஷ் அம்பானி, இன்று காலை ஹெ லிகாப்டர் மூலம் கேரளா மாநிலம் குருவாயூருக்கு வந்தார். அவர் வந்த ஹெ லிகாப்டர் ஸ்ரீகிருஷ்ணா கல்லுாரி மைதானத்தில் தரையிறங்கியது.
அதை தொடர்ந்து, அவர் சாலை வழியாக, குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணர் கோயிலுக்கு தெற்குவழியில் வந்தார். அவரை தேவசம் போர்டு தலைவர் விஜயன் மற்றும் கோயில் அதிகாரிகள் வரவேற்றனர். அவர் கோயிலின் கருவறைக்குள் பிரார்த்தனை செய்து பிரசாதம் பெற்றார்.


சடங்குகளுக்குப் பிறகு, தேவசம் அதிகாரிகள் புதிய மருத்துவமனைக்கான திட்டங்கள் குறித்து அவருக்கு விளக்கினர்.அதை தொடர்ந்து மருத்துவமனை நன்கொடைக்கு கூடுதலாக, குஜராத்தில் உள்ள ரிலையன்ஸ் வனவிலங்கு பாதுகாப்பு மையத்தின் மாதிரியை அடிப்படையாகக் கொண்டு, கோயிலின் யானைகளின் பராமரிப்பை மேம்படுத்துவதற்கான தொழில்நுட்ப உதவியையும் அம்பானி வழங்கினார்.மருத்துவமனை கட்டுமானத்திற்கான ஆரம்ப பங்களிப்பாக ரூ.15 கோடிக்கான காசோலையை அவர் வழங்கினார்.இவ்வாறு தேவசம் போர்டு பதிவிட்டுள்ளது.

Advertisement