கேரள உள்ளாட்சி தேர்தல்: முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாஜ வாய்ப்பு
திருவனந்தபுரம்:முன்னாள் டிஜிபி ஆர். ஸ்ரீலேகா, முன்னாள் தடகள வீரர் பத்மினி தாமஸ் ஆகியோரை உள்ளாட்சித் தேர்தலில் பாஜ நிறுத்தியுள்ளது.
கேரளாவில் இந்தாண்டில் உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெற உள்ளன, ஆனால் அதற்கான குறிப்பிட்ட தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. இருப்பினும், தேர்தல் ஆணையம் கடந்த ஜூலை 23,அன்று வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டது.
இந்நிலையில்,வரவிருக்கும் திருவனந்தபுரம் மாநகராட்சித் தேர்தலுக்கான வேட்பாளர்களாக கேரளாவின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரி ஸ்ரீலேகா மற்றும் முன்னாள் இந்திய தடகள வீரர் பத்மினி தாமஸ் ஆகியோரை பாஜ நிறுத்தியுள்ளது.
மாநகராட்சியின் 67 பிரிவுகளுக்கான வேட்பாளர்களின் ஆரம்ப பட்டியலை பாஜ மாநிலத் தலைவர் ராஜீவ் சந்திரசேகர் இன்று அறிவித்தார்.ஸ்ரீலேகா சாஸ்தமங்கலம் பிரிவில் போட்டியிடுவார், அதே நேரத்தில் பத்மினி தாமஸ் பாளையத்தில் இருந்து தேர்தல் களத்தில் இறங்குவார்.
கேரளாவின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரியான 65 வயதான ஸ்ரீலேகா, 2020 இல் டிஜிபி பதவியில் இருந்து ஓய்வு பெற்றார், பின்னர் பாஜவில் சேர்ந்தார்.அர்ஜுனா விருது பெற்ற பத்மினி தாமஸ், 1982 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்றார்.
கேரள மாநில விளையாட்டு கவுன்சிலின் முன்னாள் தலைவராகவும் பணியாற்றினார்.முன்னாள் காங்கிரஸ் ஊழியரான தாமஸ், இந்த ஆண்டு மார்ச் மாதம் பாஜவில் சேர்ந்தார்.
பாஜ, முன்னாள் காங்கிரஸ் தலைவர்களான, மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் பொதுச் செயலாளர் தம்பனூர் சதீஷ் மற்றும் மகேஸ்வரன் நாயர் ஆகிய இருவருக்கு டிக்கெட் வழங்கியுள்ளது.பாஜ தலைவர் வி.வி. ராஜேஷ், கொடுங்கனூரில் இருந்து போட்டியிடுவார்.
இது குறித்து பாஜ மாநிலத் தலைவர் ராஜீவ் சந்திரசேகர் கூறியதாவது:
முந்தைய உள்ளாட்சித் தேர்தல்களில், திருவனந்தபுரம் மாநகராட்சியில் உள்ள 100 தொகுதியில் 35 ல் பாஜ வென்றது.
ஆட்சி செய்ய மட்டுமல்ல, அனந்தபுரி தொலைநோக்கு பார்வையை வெளிப்படுத்தவும் நாங்கள் ஒரு வாய்ப்பு கேட்கிறோம். இந்த தொலைநோக்கு பார்வையை வரும் நாட்களில் வெளியிடுவோம்.
கேரள தலைநகரை இந்தியாவின் சிறந்த நிர்வாக நகரமாக மாற்றுவதே பாஜவின் நோக்கம்.நாங்கள் அறிவித்த 67 வேட்பாளர்களும் எல்லா நேரங்களிலும் திருவனந்தபுரம் மக்களுக்கு சேவை செய்யத் தயாராக உள்ளனர். அனைத்து குடிமக்களின் கவலைகளையும் நிவர்த்தி செய்யும் ஊழல் இல்லாத நிர்வாகத்தை நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு ராஜீவ் சந்திரசேகர் கூறினார்.
மேலும்
-
ஈக்வடார் சிறையில் வன்முறை; கைதிகள் 31 பேர் உயிரிழப்பு
-
மாலியில் கடத்தப்பட்ட 5 இந்தியர்களை பாதுகாப்பாக மீட்க நடவடிக்கை; இந்திய தூதரகம்
-
எத்தனை முனை போட்டி வந்தாலும் திமுக கூட்டணி வெற்றி பெறும்: முதல்வர் ஸ்டாலின் பேட்டி
-
தமிழகத்தில் நாளை முதல் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம்
-
பட்டாவில் பெயர் சேர்க்க ரூ.20 ஆயிரம் லஞ்சம்: பெண் விஏஓ கைது!
-
பொதுமக்கள் பாதுகாப்பு கேள்விக்குறி; போலீஸ் குடியிருப்பில் நடந்த கொலை பற்றி அண்ணாமலை ஆவேசம்