தேவபாண்டலத்தில் ரத்த தான முகாம்

சங்கராபுரம்: தேவபாண்டலத்தில் கோவில் நகர அரிமா சங்கம் சார்பில் ரத்த தான முகாம் நடந்தது.

சங்கராபுரம் அடுத்த தேவபாண்டலத்தில் கோவில் நகர அரிமா சங்கம் மற்றும் சங்கராபுரம் புதுப்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் ரத்த தான முகாம் நடந்தது.

அரிமா சங்க தலைவர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார். டாக்டர்கள் விஜயகுமார், சம்பத்குமார், முன்னாள் தலைவர்கள் அண்ணாமலை, வேலு, தண்டபாணி முன்னிலை வகித்தனர். செயலாளர் இதாயத்துல்லா வரவேற்றார்.

முகாமில் 30 நபர்களிடம் இருந்து ரத்தம் தானமாக பெறப்பட்டது. சுகாதார மேற்பார்வையாளர் சரவணன் நன்றி கூறினார்.

Advertisement