வெளிநாட்டு பொருட்கள் மீதான சுங்க வரியை விமர்சனம் செய்வோர் முட்டாள்கள்; டிரம்ப் காட்டம்

12

வாஷிங்டன்: வெளிநாட்டு பொருட்கள் மீதான சுங்க வரியை விமர்சனம் செய்வோர் முட்டாள்கள் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்து உள்ளார்.



இது குறித்து, அதிபர் டிரம்ப் கூறியதாவது: வெளிநாட்டு பொருட்கள் மீதான சுங்க வரியை விமர்சனம் செய்வோர் முட்டாள்கள். இதுவரை இல்லாத அளவுக்கு பங்கு சந்தை உயர்ந்து, பணவீக்கம் இல்லாத நாடாக அமெரிக்கா உள்ளது. வரி விதிப்பதன் மூலம் உலகின் மிக பெரிய பணக்கார நாடாக அமெரிக்கா மாறி இருக்கிறது. தற்போது அமெரிக்கா அனைவராலும் மதிக்கப்படுகிறது.


வரி வருவாயிலிருந்து, அதிக வருமானம் சம்பாதிப்பவர்களை தவிர மற்ற ஒரு நபருக்கு 2000 டாலர் ஈவு தொகையாக வழங்கப்படும். அமெரிக்கா வரிகளில் இருந்து டிரில்லியன் கணக்கான டாலர்களை பெறுகிறது. முதலீடுகள் குவிந்து வருகிறது. தொழிற்சாலைகள் எல்லா இடங்களிலும் அதிகரித்து வருகிறது. இவ்வாறு அதிபர் கூறினார்.


உலக நாடுகளுக்கு அதிபர் டிரம்ப் விதித்துள்ள வரி தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் விவாதங்கள் தொடங்கியுள்ள நிலையில், இத்தகைய கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

Advertisement