அணு ஆயுத சோதனை நடத்தும் திட்டம் இல்லை: டிரம்புக்கு ரஷ்யா பதில்
வாஷிங்டன்: அமெரிக்கா மீண்டும் சோதனைகளை தொடங்க திட்டமிட்டுள்ள போதிலும், அணு ஆயுத சோதனை தடைக்கான தனது உறுதிப்பாட்டை ரஷ்யா மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளது.
இது குறித்து ரஷ்யாவின் கிரெம்ளின் மாளிகையின் செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறியதாவது: சர்வதேச அணுசக்தி சோதனை தடைகளின் கீழ், ரஷ்யா தனது உறுதிமொழிகளை கடைபிடிக்கிறது. அணுஆயுத சோதனை நடத்தும் திட்டம் இல்லை. சோதனை நடத்துமாறு அதிபர் புடின் எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை.
அணு ஆயுத சோதனைகள் மீதான நீண்ட கால தடைக்கு ரஷ்யா உறுதிபூண்டுள்ளது. மூன்று தசாப்த கால இடைநிறுத்தத்தை அமெரிக்கா மீறினால், அதற்கு நாங்கள் எதிர்வினையாற்றுவோம். அமெரிக்கா மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். இன்றைய உலகளாவிய பாதுகாப்பு கட்டமைப்பிற்கு அணுசக்தி சமநிலை என்பது மிக முக்கியமான ஒன்றாகும். இவ்வாறு டிமிட்ரி பெஸ்கோவ் கூறியுள்ளார்.
அமெரிக்க அணு ஆயுதங்களை பரிசோதிக்க தொடங்குமாறு அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டு இருந்தார். அவர், ''வேறு எந்த நாட்டையும் விட அமெரிக்காவிடம் அதிக அணு ஆயுதங்கள் உள்ளன.
ரஷ்யா இரண்டாவது இடத்திலும், சீனா மூன்றாவது இடத்திலும் உள்ளது'' என கூறியிருந்தார். தற்போது, அணு ஆயுத சோனையை மீண்டும் தொடங்குமாறு டிரம்பின் உத்தரவுக்கு ரஷ்யா பதில் அளித்துள்ளது.
எழுதி கொடுத்ததை படிப்பதுபோல் சொல்லுவதை கேட்டு முடிவுகள் எடுக்கும் தலைமை இப்படித்தான் பிதற்றுறவார்கள். தலைமை பண்பு உள்ளதா என அறிய நமது ஊர் நீதியரசரைதான் கேட்கவேண்டும் .
டிரம்ப் என்ன செய்யப்போகிறார் இப்பொழுது? வீம்புக்கு அணு ஆயுத சோதனை தொடர்ந்து செய்வாரா? இல்லை அவரும் நிறுத்துவாரா?
இது வெறும் வாய்வார்த்தை புடின் பேச்சையெல்லாம் நம்பமுடியுமா? நாளை இவர் என்ன என்ன வேண்டுமானாலும் பேசலாம் நடந்துக்கொள்ளலாம்.மேலும்
-
மாலியில் கடத்தப்பட்ட 5 இந்தியர்களை பாதுகாப்பாக மீட்க நடவடிக்கை; இந்திய தூதரகம்
-
எத்தனை முனை போட்டி வந்தாலும் திமுக கூட்டணி வெற்றி பெறும்: முதல்வர் ஸ்டாலின் பேட்டி
-
தமிழகத்தில் நாளை முதல் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம்
-
பட்டாவில் பெயர் சேர்க்க ரூ.20 ஆயிரம் லஞ்சம்: பெண் விஏஓ கைது!
-
பொதுமக்கள் பாதுகாப்பு கேள்விக்குறி; போலீஸ் குடியிருப்பில் நடந்த கொலை பற்றி அண்ணாமலை ஆவேசம்
-
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைந்து விட்டது: இபிஎஸ்