கத்தியை காட்டி மிரட்டியவர் கைது

காரைக்கால்: காரைக்காலில் குடிபோதையில் தகராறு சமதானம் செய்யவில்லை என்று மதுபானக்கடை ஊழியரை கத்தியை காட்டி மிரட்டிய நபரை போலீசார் கைது செய்தனர்.

காரைக்கால் கோட்டுச்சேரி பூவம் மாதா கோவில் தெருவை சேர்ந்த தியாகராஜன், 47; இவர் மதுபானக்கடையில் வேலை செய்து வருகிறார்.இவர் கடந்த 6ம் தேதி இரவு பணியை முடிந்து விட்டு வீடு திரும்பினார். அப்போது கடையில் வேலைசெய்யும் ஆக்கூர் பகுதியை சேர்ந்த ராமமூர்த்தி என்பவருக்கும் பூவத்தை சேர்ந்த தங்கபாண்டி ஆகிய இருவருக்கு தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது அங்கு குடிபோதையில் வந்த பூவத்தை சேர்ந்த சுதாகர், 40; தியாகராஜனிடம் ஊர் காரனை ஒருவன் அடிக்கிறான் நீ என்னடா சும்மா இருக்கிற என்று ஆபாசமாக பேசி தாக்கியுள்ளார். இதில் காயம் அடைந்த தியாகராஜன் மருந்துவமனையில் சிகிச்சை பெற்று வீட்டுக்கு சென்றார். பின் சுதாகர் , தியாகரஜன் வீட்டிற்கே சென்று அவரிடம் கத்திய காட்டி கொலை செய்துவிடுவேன் என மிரட்டினார்.

புகாரின் பேரில் கோட்டுச்சேரி போலீசார் சுதாகர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.

Advertisement