நில மோசடி பிரச்னைக்கு நிரந்தர தீர்வு அரசுக்கு முன்னாள் எம்.பி., கோரிக்கை
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில், நில மோசடி பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என முன்னாள் எம்.பி., கோரிக்கை விடுத்துள்ளார்.
முன்னாள் பா.ம.க., எம்.பி., தன்ராஜ், கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான், எஸ்.பி., சரவணன் ஆகியோரை நேரில் சந்தித்து அளித்த மனு:
விழுப்புரம் மாவட்டத்தில், பத்திர பதிவு ஆவணங்கள் இல்லாத பூர்வீக நிலம், வீடுகள் போன்ற சொத்துகளை, சிலர் மோசடியாக ஆவணங்களை தயாரித்து, ஆக்கிரமிப்பு செய்வது அதிகரித்து வருகிறது. அப்படி பாதிக்கப் பட்டதில் நானும் ஒருவன் என்பதால், இப்பிரச்னைக்கு தீர்வுகாண, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நண்பர்கள், உறவுகள் மூ லம், பணபலம், அதிகார பலத்தால் நிலம் ஆக்கிரமித்து, சட்டவிரோத செயலில் அரசியல்வாதிகள், ரவுடிகள் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள், பத்திரமில்லாத, ஆவண பரிமாற்றம் செய்யாத ஏழை மக்களின் நிலங்களை ஆக்கிரமித்து, போலி ஆவணம் மூலம் அனுபவித்து வருகின்றனர்.
உரிமையாளரிடம் சட்ட ஆவணங்கள் இருந்தாலும், பொய் தகவல் கூறி, குத்தகை சாகுபடி என வி.ஏ.ஓ.,விடம் சான்று பெற்று, வங்கி கடன் ஆவணங்களை பெற்று மோசடி செய்கின்றனர்.
இதுபோன்ற மோசடி செயல்களால், நிலப்பிரச்னைகள் ஏற்பட்டு, நண்பர்கள், வாரிசுகளிடையே பெரும் பகை ஏற்பட்டு, அடிதடி மோதல், கொலை சம்பவம் என பல பிரச்னை நடக்கிறது.
உறவினர், நண்பர்கள் என நம்பி சொத்துக்களை பராமரிக்கவும், குத்தகைக்கு விடும்போது, இது போன்ற மோசடிகள் நடக்கிறது. சொத்துகளை இழப்போர் பெரும் பாதிப்புக்குள்ளாகின்றனர். இது போன்ற நில பிரச்னைக்கு தீர்வு காணாமல் ஆயிரக்கணக்கான பிரச்னைகள், வழக்குகள் வருகின்றன. நீதிமன்றத்திற்கு சென்றாலும், நீண்டகாலம் போகிறது.
விழுப்புரம் மாவட்டம் மட்டுமின்றி, மாநிலம் முழுதும் இதுபோன்ற நில பிரச்னைகள் அதிகரித்துள்ளன. இதனை ஆய்வு செய்து, வருவாய்த்துறை, காவல்துறை, நீதித்துறை பங்களிப்புடன் ஒரு தனி பிரிவை ஏற்படுத்தி, நிரந்தர தீர்வு காண அரசுக்கு பரிந்துரைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
காட்டுப்பகுதியில் தயாராகுது பிரமாண்ட மேம்பாலம்: 'நாங்க கட்டல' என கைவிரிக்கும் அரசு துறைகள்
-
வெளிநாட்டு பொருட்கள் மீதான சுங்க வரியை விமர்சனம் செய்வோர் முட்டாள்கள்; டிரம்ப் காட்டம்
-
போராட்டம் நடத்தும் மக்களை குற்றவாளிகளைப் போல நடத்துவதா? ராகுல் ஆவேசம்
-
அணு ஆயுத சோதனை நடத்தும் திட்டம் இல்லை: டிரம்புக்கு ரஷ்யா பதில்
-
தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு மிதமான மழை
-
ஸ்ரீரங்கம் அடிமனை பிரச்னை: ஜெ.,வால் முடியாததை ஸ்டாலின் தீர்ப்பாரா?