அமெரிக்காவில் வணிக நிறுவனத்தில் துப்பாக்கிச்சூடு: சக ஊழியர் 3 பேரை சுட்டுக்கொன்ற நபர்

2


வாஷிங்டன்: டெக்சாஸில் நிறுவனம் ஒன்றில் சக ஊழியர்களை 3 பேரை கொன்ற நபர், பின்னர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு இறந்ததாக போலீசார் தெரிவிக்கின்றனர்.


அமெரிக்காவில் அடிக்கடி துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடந்து வருகிறது. அங்கு துப்பாக்கி கலாசாரம் பெருகிவிட்டது. இதற்கு அங்கு துப்பாக்கிகள் வைத்து இருப்பதற்கு பெரிய கட்டுப்பாடுகள் ஏதும் கிடையாது. தற்போது அமெரிக்காவின் டெக்சாஸ் நகரின் வடக்குப் பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு ஆண்களும், ஒரு பெண்ணும் இறந்தனர் என போலீசார் தெரிவித்தனர்.


சக ஊழியர்களை 3 பேரை கொன்ற நபர், பின்னர் தன்னைத்தானே சுட்டு உயிரிழந்தார். இந்த சம்பவம் நிகழ்ந்த போது மற்ற ஊழியர்கள் சம்பவ இடத்திலிருந்து ஓடிவிட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், அந்த பகுதியில் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வந்தனர்.


துப்பாக்கிச்சூடு நடத்திய நபர், 21 வயதான ஜோஸ் ஹெர்னாண்டஸ் காலோ என போலீசாரால் அடையாளம் காணப்பட்டார். துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை என்றாலும், இது தற்செயலானது அல்ல என போலீசார் தெரிவித்தனர்.


இது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அமெரிக்க நிறுவனத்தில் சக ஊழியர்கள் 3 பேரை சுட்டுக்கொன்ற சம்பவம் பரபரப்பை கிளப்பி உள்ளது.

Advertisement