துாய்மை பணியாளர்களுக்கு தினமும் விதவிதமான உணவு ரூ.64 கோடி செலவு செய்கிறது மாநகராட்சி
சென்னை: சென்னை மாநகராட்சியில் பணியாற்றும், 31,373 துாய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்க ஆண்டுக்கு, 64.73 கோடி ரூபாயை அரசு செலவிடுகிறது. அவர்கள் மூன்று வேளையும் வழங்கப்படும் உணவு விபரங்களையும் மாநராட்சி வெளியிட்டுள்ளது.
துாய்மை பணியாளர் தனியார் மயமாக்க எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டம் நடத்தி வரும், ஒப்பந்த துாய்மை பணியாளர்களை சமாதானப்படுத்தும் வகையில், அவர்களுக்கு சம்பளம், 585 ரூபாயில் இருந்து, 761 ரூபாயாக உயர்த்தப்பட்டது. மூன்று வேளையும் உணவு வழங்கப்படும் எனவும், அரசு அறிவித்தது.
உணவு வழங்கும் திட்டம், வரும் 15ம் தேதி துவக்கப்பட உள்ளது. சுகாதார அலுவலர்கள், திட்டத்தின் ஒருங்கிணைப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.
சென் னையில், 31,373 துாய்மை பணியாளர்கள் பயன்பெற உள்ளனர். இதில், 24,417 பேருக்கு மதிய உணவு, 1,538 பேருக்கு இரவு உணவு, 5,418 பேருக்கு காலை உணவும் வழங்கப்பட உள்ளது.
இதற்கு ஆண்டுக்கு, 64.73 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. இதற்கான உணவை, 'புட் ஸ்வீங் என்டர்பிரைசஸ்' நிறுவனம் தயாரித்து வினியோகிக்க உள்ளது.
@block_B@ தினமும் விதமான உணவு கிழமை - காலை உணவு - மதிய உணவு - இரவு உணவு திங்கள் - இட்லி, வடை, சாம்பார் - சாம்பார் சாதம், பொறியல் - இட்லி கார சட்னி, சாம்பார் செவ்வாய் - கிச்சடி, கார சட்னி - எலுமிச்சை சாதம், பொறியல் - சப்பாத்தி, குருமா புதன் - பொங்கல், சாம்பார் - வெஜி பிரியாணி, வெங்காய பச்சடி - ரவா கிச்சடி, சாம்பார் வியாழன் - ரவா உப்புமா, சட்னி - தக்காளி சாதம், உருளை பொறியல் - சப்பாத்தி, சன்னா மசாலா வெள்ளி - இட்லி, சாம்பார் - கொத்தமல்லி, புதினா சாதம், பொறியல் - இட்லி, கார சட்னி, சாம்பார் சனி - ரவா உப்புமா, சாம்பார் - புளி சாதம், பொறியல் - ரவா உப்புமா, சட்னி ஞாயிறு - சேமியா கிச்சடி, சாம்பார் - வெஜி பிரியாணி, வெங்காய பச்சடி - சப்பாத்தி, குருமா ***block_B