கொலை முயற்சி வழக்கில் தொழிலாளிக்கு 10 'ஆண்டு'



பவானி, அந்தியூரை அடுத்த கோவிலுாரை சேர்ந்தவர் தங்கராசு. அதே பகுதியை சேர்ந்தவர் முருகன், 52; கூலி தொழிலாளி. இருவருக்கும் முன்விரோதம் இருந்தது. கடந்த, 2020 ஆக.,2 ம் தேதி கோவிலுாரில் மாமா சின்னசாமி கட்டிவரும் வீட்டில் தங்கராசு கட்டிலில் படுத்து துாங்கி கொண்டிருந்தார். அங்கு சென்ற முருகன் அவர் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்தார்.

இதில் லேசான தீக்காயத்துடன் தங்கராசு தப்பினார். வெள்ளிதிருப்பூர் போலீசார் முருகனை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு, பவானி கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது. நீதிபதி ஹரிஹரன் நேற்று தீர்ப்பளித்தார். முருகனுக்கு, 10 ஆண்டு சிறை, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார். தீர்ப்பை தொடர்ந்து கோவை மத்திய சிறையில், முருகனை போலீசார் அடைத்தனர்.

Advertisement