அபகரித்த நிலத்தை அடமானம் வைத்து ரூ.79 லட்சம் மோசடி: இருவர் கைது
சென்னை: கிண்டியைச் சேர்ந்தவர் அப்துல் காதர், 65. இவர், மகளின் திருமணத்திற்காக மடிப்பாக்கத்தைச் சேர்ந்த விநாயகா ஆச்சரியாவை அணுகி உள்ளார். அப்போது விநாயகா ஆச்சரியா, சொத்திற்கு தன் பெயரில் பொது அதிகார பத்திரத்தை பெற்றுள்ளார்.
பின் போலி ஆவணங்கள் வாயிலாக, அவருக்கு பழக்கமான சேலத்தைச் சேர்ந்த சுஜாதா என்பவருக்கு விற்பனை செய்து, அவிநாசி ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியில் நில பத்திரத்தை அடமானம் வைத்து 75.80 லட்சம் கடன் பெற்றுள்ளனர்.
இதை அறிந்த அப்துல் காதர் மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி, சென்னை மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்தார்.
விசாரித்த போலீசார், மோசடியில் ஈடுபட்ட சேர்ந்த விநாயக ஆச்சார்யா, 51, சுஜாதா, 48 ஆகியோரை நேற்று கைது செய்தனர். மோசடிக்கு உடந்தையாக இருந்த சிலரை தேடி வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement