செஞ்சியில் இன்று தி.மு.க., அவசர செயற்குழு கூட்டம்

செஞ்சி: செஞ்சியில் இன்று தி.மு.க., அவசர செயற்குழு கூட்டம் நடக்க இருப்பதாக மாவட்ட செயலாளர் மஸ்தான் தெரிவித்துள்ளார்

இது குறித்து அவரது அறிக்கை: விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க., அவசர செயற்குழு ஆலோசனை கூட்டம் இன்று (13ம் தேதி) மாலை 4:00 மணிக்கு செஞ்சி அடுத்த மேல்களவாய் ஜி.கே., திருமண மண்டபத்தில் மாவட்ட அவைத்தலைவர் டாக்டர் சேகர் தலைமையில் நடக்க உள்ளது.

இதில் மண்டல பொறுப்பாளர் அமைச்சர் பன்னீர்செல்வம் கலந்து கொண்டு பேசுகின்றார். இதில் மாநில, மாவட்ட, நிர்வாகிகள், பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, கிளை செயலாளர்கள், அணி அமைப்பாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், நிர்வாகிகள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என கேட்டு கொண்டுள்ளார்.

Advertisement