நஷ்ட ஈடு தருவதில் தாமதம் இன்சூரன்ஸ் அலுவலகம் ஜப்தி
திண்டிவனம்: நஷ்ட ஈடு தருவதில் காலாதாமதம் செய்த இன்சூரன்ஸ் நிறுவனத்தை, ஜப்தி செய்ய கோர்ட் உத்தரவிட்டது.
சென்னை, வேளச்சேரியை சேர்ந்தவர் சுந்தர், 35; தொழிலதிபர். இவருக்கு மனைவி, ஒரு வயதில் மகன் உள்ளார். சுந்தர், 2013ல் கோயம்புத்துாரிலிருந்து சென்னைக்கு காரில் நண்பர்களுடன் வந்தார். மயிலம் கூட்டேரிப்பட்டு அருகே கார் வந்தபோது, மினி லாரி மோதிய விபத்தில் சுந்தர் இறந்தார். மயிலம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
திண்டிவனம் முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் சுந்தரின் தாய் சாந்தா, 65; வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் மனுதாரருக்கு நஷ்ட ஈடு வழங்க திண்டிவனம் மயிலம் ரோட்டிலுள்ள யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு கோர்ட் உத்தரவிட்டது.
நஷ்ட ஈடு வழங்காததால், கடந்த ஜனவரி, சம்பந்தப்பட்ட இன்சூரன்ஸ் அலுவலகத்தை ஜப்தி செய்ய கோர்ட் உத்தரவிடப்பட்டது. ஓரிரு மாதத்தில் நஷ்ட ஈடு தருவதாக, கம்பெனி சார்பில் கூறப்பட்டதால், ஜப்தி நடவடிக்கை கைவிடப்பட்டது.
இந்நிலையில், மனு தாரருக்கு, 56 லட்சத்து 8 ஆயிரத்து 257 ரூபாயை வழங்க வேண்டும் என்றும், இதற்காக இன்சூரன்ஸ் நிறுவனத்திலுள்ள மேஜை, கம்யூட்டர், நாற்காலி உள்ளிட்டவைகளை ஜப்தி செய்யுமாறு, நீதிபதி முகமது பாரூக் உத்தரவிட்டார்.
ஒரு மாதத்தில் நஷ்ட ஈடு தொகை தருவதாக எழுத்து பூர்வமாக கிளை மேலாளர் கூறியதை அடுத்து, நேற்று ஜப்தி நடவடிக்கை கைவிடப்பட்டது.
மேலும்
-
தமிழக அரசு ஊழியர்கள் அகவிலைப்படி 3 சதவீதம் உயர்வு
-
நவம்பர் 17ல் 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
-
மேகதாது அணை விவகாரம்; தமிழக அரசிடம் கருத்து கேட்க உச்சநீதிமன்றம் உத்தரவு
-
பயங்கரவாதிகள் தேடுதல் வேட்டை; ஜம்மு காஷ்மீரில் 3வது நாளாக நீடிக்கும் ரெய்டு
-
புதுக்கோட்டையில் திடீரென சாலையில் தரையிறங்கிய விமானம்; வாகன ஓட்டிகள் அதிர்ச்சி
-
டில்லி குண்டுவெடிப்பு சம்பவம்: குற்றவாளிகளின் ரகசிய டைரிகள் சிக்கின