டில்லி குண்டுவெடிப்பு சம்பவம்: குற்றவாளிகளின் ரகசிய டைரிகள் சிக்கின

2


புதுடில்லி: டில்லி குண்டுவெடிப்பில் தொடர்புடைய பயங்கரவாதிகள் உமர், முசாம்மில் ஆகியோரின் டைரிகள் சிக்கியுள்ளன. சங்கேத வார்த்தைகளில் எழுதப்பட்ட விவரங்களை கண்டறிய போலீசார் தீவிர முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர்.


டில்லி குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையவர்களை கைது செய்து என்ஐஏ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த வகையில், இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பயங்கரவாதிகளான உமர், முசாம்மில் ஆகியோரின் டைரிகள் சிக்கியுள்ளன. சங்கேத வார்த்தைகளில் விவரங்கள் எழுதப்பட்டு இருந்தது.

மீட்கப்பட்ட டைரி மற்றும் குறிப்பேடுகளில் இருந்து, பயங்கரவாத தாக்குதல் திட்டம் குறித்த முக்கியமான விவரங்கள் கிடைத்துள்ளன . அவர்கள் நீண்ட காலமாக சதி திட்டம் செய்து கொண்டிருந்தது விசாரணையில் அம்பலமானது.



மீட்கப்பட்ட டைரிகள் மற்றும் குறிப்பேடுகளில் நவம்பர் 8ம் தேதி முதல் 12ம் தேதி வரையிலான தேதிகளில் சதி திட்டம் நடத்த குறிப்புகள் எழுதி வைக்கப்பட்டுள்ளது. இந்த டைரிகளில் 25 நபர்களின் பெயர்களும் பட்டியலிடப்பட்டுள்ளன.


இவர்களில் பெரும்பாலும் ஜம்மு காஷ்மீர் மற்றும் பரிதாபாத்தைச் சேர்ந்தவர்கள். இது குறித்து என்ஐஏ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement