தேனியில் டிராக்டர் மீது டூவீலர் மோதல் இருவர் பலி

தேனி: தேனி மாவட்டம் எரசக்கநாயக்கனுார் தினேஷ்குமார் 32. இவர் நேற்று மதியம் தனது டிராக்டரில் செங்கல் லோடு ஏற்றி கோட்டூர் பெட்ரோல் பங்க் அருகே தேனி நோக்கி வந்தார்.

வீரபாண்டி ஆரம்ப சுகாதார நிலையம் அருகே வசிப்பவர் அருண்குமார். இவர் தேனி சமதர்மபுரம் பி.டி.ராஜன் ரோட்டில் வசிக்கும் நண்பர் சிவாவுடன் 34,டூவீலரில் சின்னமனுாரில் இருந்து தேனி நோக்கி வந்தார். அங்கு டூவீலர் டிராக்டரை முந்தி செல்ல ஹாரன் அடித்தும் தினேஷ்குமார் வழிவிடாமல் ,திடீரென பிரேக் அடித்தார். இதனால் டூவீலரில் வந்த அருண்குமார், சிவா டிராக்டரின் பின்புறம் மோதி கீழே விழுந்ததில் தலையில் பலத்தகாயம் ஏற்பட்டது. (இருவரும் ெஹல்மெட் அணியவில்லை). அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது இருவரும் பலியாயினர். தினேஷ்குமாரை வீரபாண்டி போலீசார் கைது செய்தனர்.

Advertisement