கை விலங்கிட்டு நாடு கடத்தி விடுவர்!
வேலுாரில் ஒரு நிகழ்ச்சியில், மா.கம்யூ., முன்னாள் மாநில செயலர் கே.பாலகிருஷ்ணன் பேசியதாவது: வாக்காளர் திருத்த பணிக்கு எதிராக வழக்கு தொடுத்துள்ளோம். இதில், உச்ச நீதிமன்றம் 10 நாளில் விசாரித்து தீர்ப்பு கொடுக்கப் போவதில்லை. சட்ட ரீதியாக செய்ய வேண்டியதை செய்திருக்கிறோம்.
வாக்காளர் திருத்தப் பணிக்கு ஆதரவாக வழக்குப் போட்ட ஒரே ஆசாமி, அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமிதான். அவருடைய ஓட்டு பறிக்கப் படும்போது, திருத்தப்பணியின் ஆபத்தை உணருவார். தேர்தல் கமிஷனுக்கு ஆதரவாக செயல்படுவதன் வாயிலாக, தேர்தல் கமிஷனை தன்வசப்படுத்தி, இரட்டை இலை தாவாவில் தனக்கு ஆதரவான உத்தரவை பெறலாம் என நினைக்கிறார்.
வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்பட்டால், குடியுரிமை அதிகாரிகளுக்கு நீக்கப்பட்டவர்கள் பட்டியல் அனுப்பப்படும். நாட்டு குடிமக்களின், குடியுரிமையை பறித்து, இரவோடு இரவாக அமெரிக்கா போல, இந்தியர்களை கை விலங்கிட்டு நாடு கடத்தி விடுவர். மோடி, அமித் ஷா ஆகியோர், எத்தனை அவதாரம் எடுத்து வந்தாலும், உங்கள் அவதாரங்களை காலில் போட்டு மிதிக்கும் செயலை தமிழக வாக்காளர்கள் செய்வர். இவ்வாறு அவர் பேசினார்.
மேலும்
-
சிந்தனையாளர் முத்துக்கள்!
-
டில்லி கார் குண்டு வெடிப்பை நிகழ்த்தியது பயங்கரவாதி உமர் தான்: டிஎன்ஏ சோதனையில் பகீர்
-
பாகிஸ்தானில் இதுக்கு மேல் விளையாட முடியாது; அலறும் இலங்கை வீரர்கள்
-
30 அடி உயரத்தில் செயலிழந்த ராட்டின ஊஞ்சல்: சிக்கியவர்கள் போராடி மீட்பு
-
சிறுமிக்கு தொல்லை தொழிலாளி கைது
-
ஏரியில் மூழ்கி ஒருவர் பலி