கோவையில் இயற்கை வேளாண் மாநாடு வரும் 19ல் பிரதமர் துவக்கி வைக்கிறார்
கோவை: தென்னிந்திய இயற்கை வேளாண் கூட்டமைப்பு சார்பில், கோவையில் மூன்று நாட்கள் நடைபெற உள்ள மாநாட்டை, வரும் 19ம் தேதி பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்.
இது குறித்து, தமிழக அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது: தென்னிந்திய இயற்கை வேளாண் கூட்டமைப்பு சார்பில், கோவை 'கொடிசியா' வளாகத்தில் தென்னிந்திய அளவில் இயற்கை வேளாண் மாநாடு, 19 முதல் 21 வரை மூன்று நாட்கள் நடக்கிறது.
தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, புதுச்சேரி மாநிலங்களைச் சேர்ந்த இயற்கை வேளாண் விவசாயிகள் பங்கேற்கின்றனர். மாநாட்டை, 19ம் தேதி பிரதமர் மோடி துவக்கி வைத்து சிறப்புரையாற்றுகிறார். 5,000க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்கின்றனர். அதன்பின், தென்மாநில அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட, 50 வேளாண் விஞ்ஞானிகளுடன், ஒரு மணி நேரம் கலந்துரையாடுகிறார்.
வேளாண் கொள்கை குறித்து, மத்திய அரசே முடிவெடுக்க வேண்டிய அதிகாரம் இருப்பதால், பிரதமர் மோடி பங்கேற்கிறார். கருத்தரங்கில் நிறைவேற்றும் தீர்மானங்களை பிரதமரிடம் கொடுக்க உள்ளோம். இயற்கை வேளாண் விஞ்ஞானிகள், வேளாண் அறிஞர்கள் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டு, தீர்மானங்கள் வடிவமைத்து வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
விவசாயி என்றால் பெரிய நிலசுவான்தார் இல்லை. ஐந்து ஏக்கருக்கு குறைவாய் வைத்துள்ள விவசாயிகளை கலந்து பேசவேண்டும். மான்யம் இவர்களுக்கு மட்டும் மான்யம் வழங்கவேண்டும்.மக்களின்பசி ஆற்ற சுத்தமான விளைபொருள் வேண்டும். ரசாயன உரம் மருந்து இட்டதால் வளரும் விளைபொருள்கள் தேவை குறைய யோசிக்கவேண்டும் சுத்தமான விளை பொருள்கள் அரை வயிற்றுக்கு போதுமானது. அப்போதுதான் மருந்துகள் தேவை குறையும்.
கமான் கமான்
ஆஹா... சின்ராசு எலெக்சன் வண்டிய தமிழ் நாட்டுப் பக்கம் திருப்பியாச்சு டோய்... அடுத்த பொங்கலுக்குள்ள பத்து தபா... அப்புறம் பொங்கல் கொண்டாட ஒரு பாஞ்சு தபா அரசு முறை பயணமாக வருவாப்ல...
You are shouting beyond 200.. control and cry within 200 limits.. adimaisமேலும்
-
டில்லி குண்டுவெடிப்பு நிகழ்த்த குற்றவாளிகள் மூன்று பேர் ரூ 20 லட்சம் நிதி திரட்டி சதிகாரன் உமரிடம் ஒப்படைப்பு; விசாரணையில் அம்பலம்
-
டில்லி மஹிபால்பூரில் பயங்கர வெடிசத்தம்; தலைநகரில் மேலும் பரபரப்பு
-
டில்லி விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்; உச்சகட்ட பரபரப்பு
-
43 நாள் அரசு முடக்கம் முடிவுக்கு வந்தது: அரசு நிதி மசோதாவில் கையெழுத்திட்டார் அதிபர் டிரம்ப்
-
தங்கம் விலை கிடுகிடு உயர்வு: ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1600 அதிகரிப்பு
-
ஏற்றுமதியை வலுப்படுத்த ரூ.25,000 கோடி செலவில் ஊக்குவிப்பு இயக்கம்; மத்திய அமைச்சரவை ஒப்புதல்