டில்லி குண்டுவெடிப்பு நிகழ்த்த குற்றவாளிகள் மூன்று பேர் ரூ 20 லட்சம் நிதி திரட்டி சதிகாரன் உமரிடம் ஒப்படைப்பு; விசாரணையில் அம்பலம்
புதுடில்லி: டில்லியில் கார் குண்டு வெடிப்பு நிகழ்த்த, கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் 3 பேர் ரூ.20 லட்சம் நிதி திரட்டி சதிகாரன் உமரிடம் ஒப்படைத்துள்ளனர் என்பது விசாரணையில் அம்பலமானது.
டில்லியில் நவ.,10ம் தேதி செங்கோட்டை அருகே காரை வெடிக்கச் செய்து பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் குழு அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணையில் கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளிகளான டாக்டர் முசம்மில், டாக்டர் அதீல் மற்றும் டாக்டர் ஷாஹீன் ஆகியோர் கூட்டாக, 20 லட்சம் ரூபாய் ரொக்கமாக திரட்டி, அதை உமரிடம் ஒப்படைத்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
அந்தக் குழு குருகிராம், நுஹ் மற்றும் அருகிலுள்ள பகுதிகளிலிருந்து ரூ.3 லட்சம் மதிப்புள்ள 20 குவிண்டால்களுக்கு உரத்தை வாங்கி இருக்கிறது.
உமருக்கும் டாக்டர் முசம்மிலுக்கும் இடையே பணத் தகராறு ஏற்பட்டு உள்ளது.
கூடுதலாக, உமர் சிக்னல் செயலியில் நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க 2-4 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குழுவை உருவாக்கியது விசாரணையில் தெரிய வந்தது.
இதற்கிடையே டில்லியில் கார் குண்டுவெடிப்பை நிகழ்த்தியது பயங்கரவாதி உமர் தான் என்பது டிஎன்ஏ சோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
மொத்தம் எட்டு பேர் தலா இரண்டு பேராக, சென்று 4 இடங்களில் குண்டு வைக்க திட்டமிட்டு இருந்தது என்ஐஏ விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
டில்லி குண்டு வெ டிப்பு தொடர்பாக, கான்பூரை சேர்ந்த முகமது ஆரிப் என்ற மருத்துவ மாணவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். காஷ்மீர் மாநிலம் அனந்தநாக் மாவட்டத்தை சேர்ந்த முதலாமாண்டு இருதய சிக்கிச்சை பிரிவு மாணவரான இவர், நேற்று மாலை போலீசாரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
இவர் கடந்த 3 மாதங்களாக இங்கு படித்து வருகிறார். வெளியில் தங்கி, தினமும் கல்லூரிக்கு சென்று வந்தார்.
அருமையான கருத்து. ஆனால் இதை குண்டு வைத்தானே அந்த சமூகத்தை கேட்டு பாரும் அவனை ஆதரிக்கிறார்களா இல்லை எதிர்க்கிறார்களா என்பதை. மனிதத்தை விட மதம்தான் பெரியது என்பவர்களிடம் ஒன்றும் செய்ய முடியாது. நாம் இப்படியே கூறி நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ள வேண்டியதுதான்.
தமிழகத்தில் உள்ள அரசியல்வாதிகள் எவனும் இந்த தீவிரவாதச் செயலை வன்மையாக கண்டிக்கிறோம் என சொல்லவில்லை மாறாக இறந்தவர்களுக்கும் பாதிக்கப் பட்டவர்களுக்கும் எங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம் என்றுதான் சொல்கிறான்கள் இதிலிருந்தே இவன்களின் சிறுபான்மையினரின் ஓட்டு வங்கி பாசம் வெளிப்படுவதை கவனிக்காத இந்துக்கள் கருணாநிதி சொன்னது போல் சோற்றால் அடித்த பிண்டங்கள் என்பதில் சந்தேகமே இல்லை..
இருதய சிகிச்சை பிரிவு மாணவர்.. ஒருவேளை இருதய சிகிச்சை படிப்பு முடித்து பல இதயங்களை சுலபமாக எடுக்கலாம் என்று சேர்ந்திருப்பாரோ?
மத நல்லினக்கம்
ஒவ்வொரு மதமும், மனிதர்களை நல்வழிப் படுத்த ஏற்படுத்தப் பட்டதேயாகும். எந்த மதமும் தீவிரவாதத்தை கையில் எடுக்கச் சொல்வது கிடையாது. ஆகையால், மேற்சொன்னவர்கள் யாவரும் எந்தஒரு மதத்தின் கீழும் வர அறுகதையற்றவர்களே மனித குலத்தையே அழிக்கப் புறப்பட்ட, இவர்கள் யாவரும் தீவிரவாதி என்ற மதத்தை சார்ந்தவர்களேயாவர்.
உரத்தை வைத்து இராசயன வெடி விபத்து நிகழ்த்த திட்டம் இட்டு இருக்கலாம். என்ன ஜென்மங்களோ. படித்தவன் நாட்டை கெடுத்தான் படிக்காதவன் ஊரை கெடுத்தான்.
அவர்களுக்கு நிதி வழங்கிய அனைவரையும் கைது செய்து விசாரிக்க வேண்டும்.மேலும்
-
தமிழக அரசு ஊழியர்கள் அகவிலைப்படி 3 சதவீதம் உயர்வு
-
நவம்பர் 17ல் 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
-
மேகதாது அணை விவகாரம்; தமிழக அரசிடம் கருத்து கேட்க உச்சநீதிமன்றம் உத்தரவு
-
பயங்கரவாதிகள் தேடுதல் வேட்டை; ஜம்மு காஷ்மீரில் 3வது நாளாக நீடிக்கும் ரெய்டு
-
புதுக்கோட்டையில் திடீரென சாலையில் தரையிறங்கிய விமானம்; வாகன ஓட்டிகள் அதிர்ச்சி
-
டில்லி குண்டுவெடிப்பு சம்பவம்: குற்றவாளிகளின் ரகசிய டைரிகள் சிக்கின