தங்கம் விலை கிடுகிடு உயர்வு: ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1600 அதிகரிப்பு
சென்னை: சென்னையில் இன்று (நவ., 13) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.200 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.11,800க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.1,600 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.94,400க்கு விற்பனை ஆகிறது.
சர்வதேச நிலவரங்களால், நம் நாட்டில் தங்கம் விலையில் அதிக ஏற்ற, இறக்கம் காணப்படுகிறது. நேற்று முன்தினம் (நவ.,11), ஆபரண தங்கம் கிராம் 11,700 ரூபாய்க்கும், சவரன் 93,600 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 170 ரூபாய்க்கு விற்கப்பட்டது. நேற்று (நவ.,12) தங்கம் விலை கிராமுக்கு 100 ரூபாய் குறைந்து, 11,600 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு 800 ரூபாய் சரிவடைந்து, 92,800 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி கிராமுக்கு, 3 ரூபாய் உயர்ந்து, 173 ரூபாய்க்கு விற்பனையானது.
இந்நிலையில் இன்று (நவ., 13) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.200 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.11,800க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.1,600 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.94,400க்கு விற்பனை ஆகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.9 உயர்ந்து ஒரு கிராம் ரூ.182க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1600 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.95 ஆயிரத்தை நெருங்கி புதிய உச்சத்தை தொட்டு உள்ளது.
ரூவா மதிப்பு கிடு கிடுன்னு உசந்திருச்சு அதான்.... டாலருக்கு 100 ரூவாயாயிடும்
சிறிது நாட்களாக குறையும் போதே நினைச்சேன் இப்படி தான் பண்ணுவாங்கன்னு. நல்ல வேளையாக rate கம்மி ஆனப்ப digital gold வாங்கிட்டேன்.
தேவையற்ற செய்திமேலும்
-
டில்லி குண்டுவெடிப்பு சம்பவம்: குற்றவாளிகளின் ரகசிய டைரிகள் சிக்கின
-
டில்லி குண்டுவெடிப்பு நிகழ்த்த குற்றவாளிகள் மூன்று பேர் ரூ 20 லட்சம் நிதி திரட்டி சதிகாரன் உமரிடம் ஒப்படைப்பு; விசாரணையில் அம்பலம்
-
டில்லி மஹிபால்பூரில் பயங்கர வெடிசத்தம்; தலைநகரில் மேலும் பரபரப்பு
-
டில்லி விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்; உச்சகட்ட பரபரப்பு
-
43 நாள் அரசு முடக்கம் முடிவுக்கு வந்தது: அரசு நிதி மசோதாவில் கையெழுத்திட்டார் அதிபர் டிரம்ப்
-
ஏற்றுமதியை வலுப்படுத்த ரூ.25,000 கோடி செலவில் ஊக்குவிப்பு இயக்கம்; மத்திய அமைச்சரவை ஒப்புதல்