டில்லி விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்; உச்சகட்ட பரபரப்பு
புதுடில்லி: டில்லியில் கார் குண்டுவெடிப்பு தாக்குதல் நிகழ்த்தப்பட்ட நிலையில், இண்டிகோ விமான நிறுவனத்தின் குறைகேட்பு பக்கத்தில், டில்லி விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 10ம் தேதி டில்லி செங்கோட்டையில் உமர் என்பவன் ஓட்டி வந்த கார் மூலம் வெடிகுண்டு தாக்குதல் சம்பவத்தை அரங்கேற்றினான். இந்த தாக்குதலில் 13 பேர் உயிரிழந்தனர். தலைநகரில் பேரதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக என்ஐஏ குழு அமைத்து விசாரித்து வருகிறது.
இந்தத் தாக்குதல் சம்பவத்தில் டாக்டர்கள் போன்ற உயர்நிலையில் உள்ளவர்களுக்கு தொடர்பிருப்பது தெரிய வந்தது. மேலும், இது தொடர்பாக அடுத்தடுத்து டாக்டர்கள் சிக்கி வருகின்றனர்.
கார் வெடிகுண்டு தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து டில்லியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. பல்வேறு இடங்களில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில், இண்டிகோ விமான நிறுவனத்தின் குறைகேட்பு பக்கத்தில், டில்லி விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பொதுமக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.
இதேபோல, சென்னை, கோவா உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் உள்ள விமானநிலையங்களுக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் தீவிர சோதனை நடத்தினர்.
இது குறித்து டில்லி போலீசார் கூறுகையில், "நேற்று மாலை 4 மணியளவில் தீயணைப்பு வீரர்களுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில், டில்லி விமான நிலையத்தின் 3வது முனையத்தில் வெடிகுண்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு நேரில் சென்று தீவிர சோதனை நடத்தப்பட்டது. அதன்பிறகு தான் அது புரளி என தெரியவந்தது. இதேபோல, பிற பகுதியில் உள்ள விமான நிலையங்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது. அங்கும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன," என்றனர்.
அமைதிகளின் அமைதியான வேலை
வதந்திபரப்பும் இந்த மாதிரி நபர்களை கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும். மதம் & அரசியல் சாயம் பூசாமல் உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும்.
நம்மால் நிச்சயம் கண்டுபிடிக்க இயலும்.மேலும்
-
டில்லி குண்டுவெடிப்பு நிகழ்த்த குற்றவாளிகள் மூன்று பேர் ரூ 20 லட்சம் நிதி திரட்டி சதிகாரன் உமரிடம் ஒப்படைப்பு; விசாரணையில் அம்பலம்
-
டில்லி மஹிபால்பூரில் பயங்கர வெடிசத்தம்; தலைநகரில் மேலும் பரபரப்பு
-
43 நாள் அரசு முடக்கம் முடிவுக்கு வந்தது: அரசு நிதி மசோதாவில் கையெழுத்திட்டார் அதிபர் டிரம்ப்
-
தங்கம் விலை கிடுகிடு உயர்வு: ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1600 அதிகரிப்பு
-
ஏற்றுமதியை வலுப்படுத்த ரூ.25,000 கோடி செலவில் ஊக்குவிப்பு இயக்கம்; மத்திய அமைச்சரவை ஒப்புதல்
-
டில்லி குண்டு வெடிப்பு சம்பவம்: அசாமில் தேசவிரோதிகள் 15 பேர் கைது