43 நாள் அரசு முடக்கம் முடிவுக்கு வந்தது: அரசு நிதி மசோதாவில் கையெழுத்திட்டார் அதிபர் டிரம்ப்
வாஷிங்டன்: அமெரிக்காவில் 43 நாட்கள் அரசு நிர்வாகம் முடக்கம் முடிவுக்கு வந்தது. அரசு நிதி மசோதாவில் அந்நாட்டு அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டார்.
அமெரிக்காவில் அரசு துறைகளுக்கான பட்ஜெட், அக்., 1 முதல் அமலுக்கு வரும். இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டில், முந்தைய அரசின் திட்டங்கள் நீக்கப்பட்டதால், எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி ஒப்புதல் தரவில்லை. தற்போது செனட் சபையில் ஆளும் குடியரசு கட்சிக்கு, 53 பேரும், ஜனநாயக கட்சிக்கு, 47 பேரும் உள்ளனர். குறைந்தபட்சம், 60 பேரின் ஆதரவு தேவை என்பதால் மசோதா நிறைவேறவில்லை.
இதையடுத்து நிதி முடக்கம் ஏற்பட்டதால், பல துறைகள், சேவைகள் முடங்கின. பல அரசு ஊழியர்கள் சம்பளமில்லாமல் விடுமுறையில் அனுப்பப்பட்டனர். நிதி இல்லாததுடன், ஊழியர் பற்றாக்குறையும் சேர்ந்ததால் சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. அமெரிக்க வரலாற்றிலேயே மிகவும் அதிகபட்சமாக, 43 நாட்களாக இந்த நிதி முடக்கம் நீடிக்கிறது.
இந்நிலையில், தங்களின் முக்கிய கோரிக்கைகள் ஏற்கப்பட்டதால், ஜனநாயக கட்சியினரின் சிலர் ஆதரவு அளித்ததால், மசோதா செனட் சபையில் நிறைவேறியுள்ளது. அடுத்ததாக, பிரதிநிதிகள் சபையில் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதிபர் டிரம்ப் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த மசோதாவில் அதிபர் டிரம்ப் விரைவில் கையெழுத்திட்டார். 43 நாட்களுக்கு அரசு நிர்வாகம் முடக்கம் முடிவுக்கு வந்தது.
மசோதாவில் கையெழுத்திட்ட பிறகு அதிபர் டிரம்ப் கூறியதாவது: சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்காக நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர்களைப் பறிக்கும் முயற்சியில், உள்ள ஜனநாயகக் கட்சியினர் கடந்த 43 நாட்களாக, அமெரிக்க அரசாங்கத்தை முடக்கினர். இன்று, மிரட்டி பணம் பறிப்பதற்கு நாங்கள் ஒருபோதும் அடிபணிய மாட்டோம், என்றார்.
தற்போதைய பட்ஜெட்டில், சில துறைகளுக்கு 2026 ஜன., 30ம் தேதி வரை மட்டுமே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதனால், மீண்டும் மசோதா கொண்டு வரப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
டிரம்ப் அண்ணே, உங்க செயல்பாடே ஒன்னும் புரியல. நீங்களும் குழம்பி, உங்க ஊர் ஆளுங்களையும் குழப்பி, மற்ற நாட்டு மக்களையும் குழப்பி எல்லாரையும் ஒரு வழி பண்ணிடுவீங்க போல இருக்கே.
இனி ட்ரம்ப் சில நாட்களுக்கு கவலையில்லை. இனி வழக்கம் போல போர்களை நிறுத்த கிளம்பி விடுவார். பாகிஸ்தான் ஃபீல்ட் மார்ஷல் உடன் சேஙதீவிர வாதிகளை தூண்டி விட்டு இந்தியாவில் தீவிர வாதம் செய்ய வைப்பார். இந்தியா பாகிஸ்தான் தீவிர வாதிகளின் நிலைகளை அழிக்கும். உடனே பாகிஸ்தானிடம் சொல்லி போரை நிறுத்த சொல்ல கேட்க வைப்பார். நமது இராணுவமும் போனால் போகிறது என்று விடுவார்கள். உடனே ட்ரம்ப் ஃபீல்ட் மார்ஷல் இடம் சொல்லி நோபல் பரிசுக்கு விண்ணப்பம் செய்வார். அது கிடைக்காமல் போகலாம் கிடைக்கா விட்டால் வரி உயர்வு வெளி நாட்டினரை வெளியேற்றம் என்று ஆரம்பிப்பார். போரே செய்யாமல் கோல்ட் வார் நடத்தி கொண்டு இருக்கும் நாடுகளுக்கு சென்று ஒப்பந்தம் போடுவார். போரை நிறுத்தி விட்டேன் என்று மார் தட்டிக் கொள்வார். அமெரிக்கர்களுக்கு மாதம் இரண்டாயிரம் டாலர் வழங்குவார். நோபல் பரிசு கேட்பார்.
உங்க ஊர்லயே இப்படி பல பிரச்சினைகள் ஓடுது. அதையெல்லாம் சரிசெய்வதை விட்டுவிட்டு, பலநாட்டுப்போரை நிறுத்தினேன் என்று பீலா விட்டுக்கொண்டு காலத்தை ஒட்டிக்கொண்டிருந்தீர்கள். இப்பொழுது உங்கள் அரசு நிர்வாகமே முடக்கம் ஆனபிறகு ஓரளவுக்கு புத்தி வந்திருக்கும் என்று நினைக்கிறோம். முதலில் நம் வீட்டை சுத்தமாக வைக்க முயலுவோம். பிறகு மாற்றான் வீட்டை சுத்தம் செய்யமுயலுவோம். புரிந்ததா?
இதுக்கு பேர் தான் கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று எங்க ஊர்ல சொல்லுவாங்கமேலும்
-
டில்லி குண்டுவெடிப்பு சம்பவம்: குற்றவாளிகளின் ரகசிய டைரிகள் சிக்கின
-
டில்லி குண்டுவெடிப்பு நிகழ்த்த குற்றவாளிகள் மூன்று பேர் ரூ 20 லட்சம் நிதி திரட்டி சதிகாரன் உமரிடம் ஒப்படைப்பு; விசாரணையில் அம்பலம்
-
டில்லி மஹிபால்பூரில் பயங்கர வெடிசத்தம்; தலைநகரில் மேலும் பரபரப்பு
-
டில்லி விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்; உச்சகட்ட பரபரப்பு
-
தங்கம் விலை கிடுகிடு உயர்வு: ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1600 அதிகரிப்பு
-
ஏற்றுமதியை வலுப்படுத்த ரூ.25,000 கோடி செலவில் ஊக்குவிப்பு இயக்கம்; மத்திய அமைச்சரவை ஒப்புதல்