வக்கீல்கள் புடைசூழ வந்த எம்.பி.,க்கு நீதிபதி கண்டிப்பு
வேலுார்: தேர்தலில் பண பட்டுவாடா தொ டர்பான வழக்கில், நீதிமன்றத்தில் ஆஜராக 20க்கும் மேற்பட்ட வக்கீல்கள் புடைசூழ வந்த தி.மு.க., - எம்.பி., கதிர் ஆனந்தை நீதிபதி கண்டித்தார்.
வேலுார் தொகுதி எம்.பி., கதிர் ஆனந்த், 2019 லோக்சபா தேர்தலில் போட்டியிட்ட போது, வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்வதற்காக கோடிக்கணக்கான ரூபாய் பணம் பதுக்கி வைத்திருந்ததாக தொடரப்பட்ட வழக்கின் விசாரணைக்காக, வேலுார் நீதிமன்றத்தில் நேற்று நேரில் ஆஜரானார். அப்போது, 20க்கும் மேற்பட்ட வக்கீல்கள் புடைசூழ அவர் வந்ததால், நீதிபதி அது குறித்து கேள்வி எழுப்பினார்.
'நீதிமன்றத்திற்கு இதுபோன்று கும்பல் சேர்த்துக் கொண்டு வரக்கூடாது' என, எம்.பி.,யை கண்டித்தார். பின்னர், வழக்கை விசாரித்த நீதிபதி சக்திகுமார், இவ்வழக்கில் கதிர் ஆனந்த் இன்று மீண்டும் ஆஜராக வேண்டும் எ ன, உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.
இவனுங்க எல்லாம் எப்படி நல்லா இருக்கானுங்க !!!!!!
எசமான் எவ்வளவு செலவு செய்து அம்புட்டு வழக்கறிங்கர்களை கூடி வந்திருப்பார் என யோசியுங்கள். மௌத் புளித்ததோ மேங்கோ புளித்ததோ என புசுக்குனு எதையும் சொல்லாதீங்க.
பணம் கொடுத்தால் வக்கீல்கள் புடைசூழ வரத்தான் செய்வார்கள். எல்லாமே பணம்தான். ஒரு ஏழைக்கு ஒரு வக்கீல் கூட வரமாட்டார்.
இவன் கேடுகெட்டவன் சார் .... கொஞ்சம் கூட சூடு சொரணை இல்லாத குடும்பம்
நீதியரசரின் இந்த கண்டிப்பை அரசியல் வாதிகள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினா்கள் அனைவரும் கட்சி பேதமின்றி கண்டிப்பாக கடைபிடிக்கவேண்டும். அப்பொழுதுதான் நீதிமன்ற வளாகத்தில் தேவையில்லாத நெரிசல்களைத் தவிா்க்கலாம். அதுபோன்று தேவையில்லாத பிரச்சனைகளை தவிா்க்கலாம். செயல்படுத்துவாா்களா அரசியல்வாதிகள், கொஞ்சம் கடினம்தான்.
விளையும் பயிர் முளையிலேயே தெரியும்.
இவனுகள திருத்தவே முடியாதுப்பா. பந்தாவுல ஒன்னும் குறைச்சல் இல்லை.மேலும்
-
டில்லி மஹிபால்பூரில் பயங்கர வெடிசத்தம்; தலைநகரில் மேலும் பரபரப்பு
-
டில்லி விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்; உச்சகட்ட பரபரப்பு
-
43 நாள் அரசு முடக்கம் முடிவுக்கு வந்தது: அரசு நிதி மசோதாவில் கையெழுத்திட்டார் அதிபர் டிரம்ப்
-
தங்கம் விலை கிடுகிடு உயர்வு: ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1600 அதிகரிப்பு
-
ஏற்றுமதியை வலுப்படுத்த ரூ.25,000 கோடி செலவில் ஊக்குவிப்பு இயக்கம்; மத்திய அமைச்சரவை ஒப்புதல்
-
டில்லி குண்டு வெடிப்பு சம்பவம்: அசாமில் தேசவிரோதிகள் 15 பேர் கைது