பீஹார் தேர்தல் முடிவில் சுவாரஸ்யம்: 27 ஓட்டுகளில் வென்ற நிதிஷ் வேட்பாளர்
பாட்னா: பீஹார் தேர்தலில் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தள வேட்பாளர் ஒருவர் 27 ஓட்டுகள் வித்தியாசத்தில் வென்றுள்ளார்.
பீஹார் சட்டசபை தேர்தல் முடிவுகள் பெரும் எதிர்பார்ப்புடன் வெளியாகி உள்ளன. முன் எப்போதும் இல்லாத வகையில் தேசிய ஜனநாயக கூட்டணி வரலாற்று வெற்றியை பெற்றுள்ளது.
இந்த தேர்தல் முடிவுகளில் பல்வேறு சுவாரஸ்யங்கள் உள்ளன. அதில் முக்கியமாக ஐக்கிய ஜனதா வேட்பாளர் ஒருவர் வெறும் 27 ஓட்டுகளில் தமது வெற்றியை பதிவு செய்துள்ளார்.
சந்தேஷ் தொகுதியில் நிதிஷின் ஐக்கிய ஜனதா தள வேட்பாளராக போட்டியிட்டவர் ராதா சரண் ஷா. இவரை எதிர்த்து ராஷ்டிரிய ஜனதா தள வேட்பாளர் திபு சிங் களம் கண்டார்.
தொடக்கம் முதலே இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. ஓட்டுகள் முன்னிலையில் முடிவுகள் மாறி, மாறி இருந்ததால் யாருக்கு வெற்றி என்பது தெரியாத நிலை இருந்தது. 28 சுற்றுகள் முடிவில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தள வேட்பாளர் ராதா சரண் ஷா வெற்றி பெற்றார். இதில் அவரின் வெற்றி வித்தியாசம் என்பது வெறும் 27 ஓட்டுகள் தான்.
ராதா சரண் ஷா 80,598 ஓட்டுகளும், அவரை எதிர்த்த திபு சிங் 80571 ஓட்டுகளும் பெற்றனர். வெறும் 27 ஒட்டுகள் வெற்றியை தீர்மானித்து உள்ளது. அவரது வெற்றியை ஐக்கிய ஜனதா தளம் தொண்டர்களும், ராதா சரண் ஷா ஆதரவாளர்களும் விமர்சையாக கொண்டாடினர்.
மேலும்
-
காஷ்மீரில் போலீஸ் ஸ்டேஷனில் வெடிகுண்டு வெடித்ததில் 7 பேர் பலி; 30 பேர் காயம்
-
ஐந்து மாவட்டங்களில் நாளை கனமழை
-
தொழில்நுட்ப பிரச்னை காரணமாக புதுச்சேரி - ைஹதராபாத் விமானம் ரத்து
-
கத்தியை காட்டி மிரட்டல் 4 வாலிபர்கள் கைது
-
நெல்லித்தோப்பு தொகுதியில் போட்டி ஓம்சக்தி சேகர் திட்டவட்டம்
-
பிள்ளையார்பட்டியில் சுகாதாரத்துறை ஆய்வு