சிறையில் இருந்து வந்தவுடன் கைவரிசை 'சிசிடிவி'யில் சிக்கிய 'பலே' பைக் திருடன்
தாம்பரம்: சிறையில் இருந்து வந்து, சென்னை புறநகர் பகுதிகளில் மீண்டும் பைக் திருட்டில் ஈடுபட்ட 'பலே' பைக் திருடனை, போலீசார் கைது செய்தனர்.
மேற்கு தாம்பரம், இரும்புலியூர், சத்யசாய் நகரைச் சேர்ந்தவர் பிரகாஷ், 39; தனியார் நிறுவன ஊழியர். கடந்த 11ம் தேதி, தாம்பரம் ரயில் நிலைய வளாக 'பார்க்கிங்' பகுதி அருகே, தன் 'ஹோண்டா யூனிகார்ன்' பைக்கை நிறுத்தி சென்றார்.
மதியம் திரும்பி வந்து பார்த்தபோது, பைக் திருட்டு போயிருந்தது. தாம்பரம் போலீசார், அப்பகுதியில் உள்ள 'சிசிடிவி' எனும் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரித்தனர்.
இதில், காஞ்சிபுரம் மாவட்டம், காவனுாரைச் சேர்ந்த 'பலே' பைக் திருடனான சங்கர், 43; என்பது தெரிய வந்தது. நேற்று முன்தினம் அவரை போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில், 15 இருசக்கர வாகனங்களை திருடிய வழக்கில், சங்கர் நகர் போலீசாரால் கைது செய்யப்பட்டு, ஏற்கனவே சிறைக்கு சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. சிறையில் இருந்து வந்தவுடன், மீண்டும் கைவரிசை காட்டியது தெரிய வந்தது.
திருடும் வாகனங்களை, பொத்தேரி உள்ளிட்ட வெவ்வேறு ரயில் நிலைய 'பார்க்கிங்' பகுதிகளில், டோக்கன் போட்டு நிறுத்திவிட்டு செல்வதை வழக்கமாக கொண்டிருந்த சங்கர், சில வாரங்கள் கழித்து திரும்பி வந்து, கட்டணத்தை செலுத்தி வாகனத்தை எடுத்து சென்று விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது.
சங்கரை கைது செய்த போலீசார், தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
மேலும்
-
காஷ்மீரில் போலீஸ் ஸ்டேஷனில் வெடிகுண்டு வெடித்ததில் 7 பேர் பலி; 30 பேர் காயம்
-
ஐந்து மாவட்டங்களில் நாளை கனமழை
-
தொழில்நுட்ப பிரச்னை காரணமாக புதுச்சேரி - ைஹதராபாத் விமானம் ரத்து
-
கத்தியை காட்டி மிரட்டல் 4 வாலிபர்கள் கைது
-
நெல்லித்தோப்பு தொகுதியில் போட்டி ஓம்சக்தி சேகர் திட்டவட்டம்
-
பிள்ளையார்பட்டியில் சுகாதாரத்துறை ஆய்வு