மாணவர்களுக்கான அறிவியல் கல்வி சுற்றுலா
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில், 9 முதல், பிளஸ் 2 வரை படிக்கும், 449 மாணவர்கள், 60 ஆசிரியர்கள், நேற்று கல்வி சுற்றுலா சென்-றனர்.
நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் எழிலரசி துவக்கி வைத்து, 'மாணவர்கள் கல்வி சுற்றுலாவின்போது எவ்-வாறு நடந்து கொள்ள வேண்டும்' என அறிவுறுத்தினார். கல்வி சுற்றுலாவில், தமிழ்நாடு கால்நடை மருத்துவ கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், ராசிபுரம் முத்தாயம்மாள் கல்லுாரி, காளிப்-பட்டி மகேந்திரா கல்லுாரி, குமாரபாளையம் ஜே.கே.கே., கல்-லுாரி ஆகிய கல்வி நிறுவனங்களுக்கு சென்று வந்தனர்.கல்வி சுற்றுலாவிற்கு, மாணவர்கள் கணிதம் மற்றும் அறிவி-யலில் பெற்ற மதிப்பெண்கள், முதல் பருவத் தேர்வில் முதன்மை பாடங்களில் பெற்ற மதிப்பெண்கள், திறனறி தேர்வில் பங்கேற்று இருத்தல், குழு செயல்பாடுகளில் ஈடுபடுதல், கலைத் திருவிழா நிகழ்ச்சிகளில் பங்கேற்றல், விளையாட்டு போட்டிகளில் பங்-கேற்றல், புத்தகம் படிக்கும் பழக்கம் மற்றும் தலைமைத்துவம் போன்ற பல்வேறு காரணிகளை கொண்டு தேர்வு செய்யப்பட்-டனர்.
இதன் மூலம், புதுமையான சிந்தனைகளை வளர்த்தல், ஆராய்ச்சி மனப்பான்மை மற்றும் தலைமை பண்பு போன்றவை-களை மாணவர்களிடையே வளர்த்துக்கொள்ள கல்வி சுற்றுலா அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.
மாவட்ட பள்ளி துணை ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி, ஒருங்கி-ணைந்த பள்ளிக்கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கவிதா, வட்-டார வள மைய மேற்பார்வையாளர் சசிராணி, ஆசிரியர் பயிற்று-னர்கள், ஆசிரியர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.
மேலும்
-
காஷ்மீரில் போலீஸ் ஸ்டேஷனில் வெடிகுண்டு வெடித்ததில் 7 பேர் பலி; 30 பேர் காயம்
-
ஐந்து மாவட்டங்களில் நாளை கனமழை
-
தொழில்நுட்ப பிரச்னை காரணமாக புதுச்சேரி - ைஹதராபாத் விமானம் ரத்து
-
கத்தியை காட்டி மிரட்டல் 4 வாலிபர்கள் கைது
-
நெல்லித்தோப்பு தொகுதியில் போட்டி ஓம்சக்தி சேகர் திட்டவட்டம்
-
பிள்ளையார்பட்டியில் சுகாதாரத்துறை ஆய்வு