போலீஸ் ஸ்டேஷன் திறப்பு ஒத்தி வைப்பு
கீழடி: கீழடியில் நேற்று புதிய போலீஸ் ஸ்டேஷன் திறப்பு விழா நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு தவிர்க்க முடியாத காரணங்களால் ஒத்தி வைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கீழடியை சுற்றிலும் பொட்டப்பாளையம், பாட்டம், கரிசல்குளம், கொந்தகை என 10 க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. கீழடியில் இரண்டாயிரத்து 600 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மக்கள் பயன்படுத்திய பொருட்கள் கொண்ட அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. தமிழக தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு பணிகளும் நடந்து வருகிறது. கீழடி அருங்காட்சியகத்திற்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகளும் தினசரி வந்து செல்கின்றனர்.
கடந்த மே மாதம் காவல்துறை மான்ய கோரிக்கையின் போது கீழடியில் இரண்டு கோடியே 83 லட்ச ரூபாய் செலவில் புதிய போலீஸ் ஸ்டேஷன் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. போலீஸ் ஸ்டேஷனுக்கு கட்டடம் கட்ட குறைந்த பட்சம் 10 சென்ட்டில் இருந்து 20 சென்ட் இடம் தேவை. கீழடியில் அரசு இடம் இல்லாத நிலையில் முதல் கட்டமாக சோதனைச் சாவடி பணிக்காக கட்டப்பட்ட கட்டடத்தில் நேற்று காலை மதுரை ஐ.ஜி., போலீஸ் ஸ்டேஷன் திறந்து வைக்க உள்ளார் என கூறி கட்டடத்திற்கு சீரியல் செட், வாழை மரம், ஸ்பீக்கர் என அனைத்து ஏற்பாடுகளும் செய்த நிலையில் திடீரென ரத்து செய்யப்பட்டது.
போலீசார் தரப்பில் கூறுகையில் : போலீஸ் ஜீப் மோதி மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் பிரச்னையாகி இருப்பதால் தற்போது வேண்டாம் என அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக தெரிவித்தனர்.
மேலும்
-
காஷ்மீரில் போலீஸ் ஸ்டேஷனில் வெடிகுண்டு வெடித்ததில் 7 பேர் பலி; 30 பேர் காயம்
-
ஐந்து மாவட்டங்களில் நாளை கனமழை
-
தொழில்நுட்ப பிரச்னை காரணமாக புதுச்சேரி - ைஹதராபாத் விமானம் ரத்து
-
கத்தியை காட்டி மிரட்டல் 4 வாலிபர்கள் கைது
-
நெல்லித்தோப்பு தொகுதியில் போட்டி ஓம்சக்தி சேகர் திட்டவட்டம்
-
பிள்ளையார்பட்டியில் சுகாதாரத்துறை ஆய்வு