அண்ணா பல்கலை 'சார்'ஐ விட இது பயங்கரமான 'சார்' இல்லை: நயினார் நாகேந்திரன்

10


விருதுநகர்: அண்ணா பல்கலை சார்-ஐ விட இது பயங்கரமான SIR இல்லை என தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.


விருதுநகரில் நிருபர்களிடம் நயினார் நாகேந்திரன் கூறியதாவது: கல்வி திட்டத்திற்கு மத்திய அரசு சில நிபந்தனைகளை விதித்துள்ளது. அந்த திட்டத்தை தமிழக அரசு வேண்டாம் என்று சொல்கிறது. இவர்கள் கூட்டணியில் உள்ள கேரளா முதல்வர் பினராயி விஜயன் இந்த திட்டத்தை ஏற்றுக்கொண்டு உள்ளார். மக்கள் மீது பினராயி விஜயனுக்கு இருக்கும் அக்கறை முதல்வர் ஸ்டாலினுக்கு இல்லை.


எல்கேஜி படிக்கும் குழந்தைகள் கூட மொபைல் போன்களை கையில் வைத்துள்ளனர். அப்டேட் ஆக வேண்டும்.

விருதுநகரில் வந்தே பாரத் ரயில் நின்று செல்ல மத்திய அமைச்சரிடம் கோரிக்கை வைக்கப்படும். எஸ்ஐஆர் ஒரு பெரிய விஷயமாக கேட்டு கொண்டு இருக்கிறீர்கள். இதுல என்ன இருக்கு? இறந்தவர்கள் ஓட்டுக்களை நீக்க வேண்டும். புதிய வாக்காளர்களை சேர்க்க வேண்டும். இது தான் எஸ்ஐஆர். அண்ணா பல்கலை சார்-ஐ விட இது பயங்கரமான SIR இல்லை.



அண்ணா பல்கலை கழகத்தில் நடந்த சாரை விட மோசமான சாரா இது? அந்த சார் இப்ப உள்ள இருக்காரு, இன்னொரு சார் வெளிய இருக்காரு. தேர்தல் முடிஞ்சா அந்த சாரும் உள்ள போயிருவாரு. இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறினார்.

Advertisement