ஆதாரம் இல்லாமல் ஓட்டு திருடியதாக காங்., குற்றச்சாட்டு; மேலும் தோல்விக்கே வழிவகுக்கும் என்கிறார் பட்னவிஸ்
புதுடில்லி: ஆதாரம் இல்லாமல் காங்கிரஸ் கட்சியினர் கூறிய ஓட்டு திருட்டு குற்றச்சாட்டு, மேலும் தோல்விக்கே வழிவகுக்கும் என மஹாராஷ்டிரா முதல்வர் பட்னவிஸ் தெரிவித்து உள்ளார்.
மஹாராஷ்டிரா மாநிலம் சத்ரபதி சம்பாஜிநகர் மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சியில், முதல்வர் பட்னவிஸ் பேசியதாவது: தேர்தல் கமிஷனிடமோ அல்லது நீதிமன்றங்களிடமோ எந்த ஆதாரத்தையும் சமர்ப்பிக்காமல், ஓட்டுப்பதிவில் மோசடி மற்றும் முறைகேடுகள் என்று காங்கிரஸ் கூறிய குற்றச்சாட்டுகள் மேலும் தேர்தல் தோல்விகளுக்கு வழிவகுக்கும். காங்கிரஸ் மக்களுடன் மீண்டும் இணைந்து, பொதுமக்களைப் பற்றிய உண்மையான பிரச்னைகளை எழுப்ப வேண்டும்.
பிரதமர் மோடி மீது மக்கள் தொடர்ந்து நம்பிக்கை வைத்திருக்கின்றனர்.எதிர்க் கட்சிகளின் போலி கதைக்கு, நாட்டு மக்கள் நேரடியாக பதிலளித்து வருகின்றனர். காங்கிரஸ் தனது அணுகுமுறையை மேம்படுத்தவில்லை என்றால், மஹாராஷ்டிராவில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல்களிலும் அதே தோல்வியை சந்திக்க நேரிடும். இவ்வாறு பட்னவிஸ் பேசினார்.
எல்லா வோட்டையும் திருடி விடுவோம் என்கிறார்.மேலும்
-
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரவு மருத்துவர் இல்லாத அவலம்
-
சுவாமியே சரணம் ஐயப்பா-1: தினம் ஒரு தகவல்: அதிர்ஷ்டம் உண்டாக...
-
தொழிற்சாலையில் தீ விபத்து: இரு தொழிலாளர்கள் படுகாயம்
-
கும்மிடி அரசு மருத்துவமனையில் கட்டுமான பணிகள் விறுவிறு
-
மேய்ச்சல் ஆடுகளை குறிவைக்கும் நாய்கள்: மர்ம நபர்களும் திருடுவதால் மக்கள் பீதி
-
வண்டிப்பெரியாறில் பரிசல் சவாரிக்கு வனத்துறை தடை