பஞ்சாபில் ஆர்எஸ்எஸ் பிரமுகர் மகன் சுட்டுக்கொலை: பைக்கில் வந்த மர்ம நபர்கள் தப்பியோட்டம்

பெரோஸ்பூர்: பஞ்சாபில் ஆர்எஸ்எஸ் பிரமுகரின் மகன் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இதுபற்றிய விவரம் வருமாறு;

பெரோஸ்பூரில் ஆர்எஸ்எஸ் உறுப்பினர் மற்றும் உள்ளூர் தலைவராக இருப்பவர் பல்தேவ் ராஜ் அரோரா. இவரின் மகன் நவீன் அரோரா(32). கடை ஒன்றை நடத்தி வருகிறார்.

இந் நிலையில் தமது கடையில் இருந்து வீடு நோக்கி நடந்து சென்று கொண்டு இருந்த நவீன் அரோராவை பைக்கில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடினர்.

குண்டுகாயம் அடைந்த நவீன் அரோரா சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். தகவலறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி மர்ம நபர்களை அடையாளம் முயற்சியில் இறங்கி உள்ளனர்.

கொல்லப்பட்ட நவீன் அரோராவின் தாத்தா தினா நாத், பெரோஸ்பூரில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் முக்கிய தலைவர்களில் ஒருவராக திகழ்ந்தவர்.

Advertisement