இந்தியாவுக்குள் ஊடுருவல்; வங்கதேசத்தைச் சேர்ந்த 10 பேர் கைது
கோல்கட்டா: மேற்கு வங்கத்திற்குள் சட்டவிரோதமாக ஊடுருவிய வங்கதேசத்தைச் சேர்ந்த 10 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இது குறித்து போலீசார் கூறியதாவது; மேற்கு வங்க மாநிலம் நாடியா மாவட்டத்தில் உள்ள இந்தியா - வங்கதேச எல்லையில் அமைந்துள்ள உமர்பூர் கிராமத்தில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, வங்கதேசத்தைச் சேர்ந்த 10 பேர் சட்டவிரோதமாக ஊடுருவியது தெரிய வந்தது. இதையடுத்து, அந்த 10 பேரும் கைது செய்யப்பட்டனர். மேலும், அவர்கள் தங்குவதற்கு இடம் கொடுத்த 2 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் இந்தியாவுக்குள் நுழைந்ததற்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement