வங்கக்கடலில் உருவாகுது புதிய காற்றழுத்த தாழ்வு: நாளை 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

1


சென்னை: கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, தேனி ஆகிய 8 மாவட்டங்களில் நாளை கனமழை (மஞ்சள் அலெர்ட்) பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடலில் நவ.,22ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி , அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு - வடமேற்கு திசையில் வலுவடையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இன்று (நவ.,17) மிக கனமழை (ஆரஞ்சு அலெர்ட்) பெய்ய வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்:

* நாகை

* திருவாரூர்

* மயிலாடுதுறை

* செங்கல்பட்டு

* காஞ்சிபுரம்

* சென்னை

* திருவள்ளூர்

இன்று (நவ.,17) கனமழை (மஞ்சள் அலெர்ட்) பெய்ய வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்:

* விழுப்புரம்

* கடலூர்

* அரியலூர்

* தஞ்சாவூர்

* புதுக்கோட்டை

* ராமநாதபுரம்

* தூத்துக்குடி

* திருநெல்வேலி

* கன்னியாகுமரி

நாளை (நவ., 18) கனமழை பெய்ய வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்:

* கன்னியாகுமரி,

* திருநெல்வேலி,

* தென்காசி,

* தூத்துக்குடி,

* ராமநாதபுரம்,

* விருதுநகர்,

* சிவகங்கை,

* தேனி

நவ., 22ம் தேதி கனமழை (மஞ்சள் அலெர்ட்) பெய்ய வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்:

* திருவள்ளூர்

* சென்னை

* காஞ்சிபுரம்

* செங்கல்பட்டு

* விழுப்புரம்

* கடலூர்

* மயிலாடுதுறை

* திருவள்ளூர்

* தஞ்சாவூர்

* நாகை

* புதுக்கோட்டை

* ராமநாதபுரம்

* தூத்துக்குடி

* திருநெல்வேலி

* கன்னியாகுமரி

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டது.

Advertisement