பரதநாட்டிய சலங்கை பூஜை விழா

புதுச்சேரி: புதுச்சேரி பரத கலாமண்டலம் பள்ளி மாணவிகளின் பரதநாட்டிய சலங்கை பூஜை விழா கம்பன் கலையரங்கத்தில் நடந்தது.

விழாவிற்கு பள்ளி நிர்வாகிகள் ஸாத்விகா காயத்ரி தலைமை தாங்கினர். சலங்கை பூஜையில் மாணவிகள் அபிராமி, ஹன்சிகா, ஹர்ஷினி, ஜிஷா, மவுக்திகா, நக் ஷத்ரா, நந்தனா, ஷிவாம்ருதா, தாருணிகா ஆகியோர் பங்கேற்ற பரதநாட்டியம் நடன நிகழ்ச்சி நடந்தது.

நடன நிகழ்ச்சிக்கு ஸாத்விகா காயத்ரியின் நட்டு வாங்கம், வாய்ப்பாட்டு வித்வான் பாலாஜி ராம்ஜி, மிருதங்கம் வித்வான் பரத், வயலின் நரம்பிசை கலாநிதி தணிகாசலம், புல்லாங்குழலில் வித்வான் வினோத் குமார், மோர்சிங் மற்றும் ஸ்பெஷல் எபெக்ட் அழகு ராமசாமி ஆகியோரின் இசையில் நடந்தது.

விழாவிற்கு சிறப்பு அழைப்பளராக லாஸ்பேட்டை சங்கர வித்யாலயா மேல்நிலைப்பள்ளி முதல்வர் சுமித்ரா சீனிவாசன் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கி மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கினார்.

Advertisement