துாங்கிய பெண்ணிடம் 5 சவரன் செயின் பறிப்பு

வேப்பூர்: வேப்பூர் அருகே வீட்டில் துாங்கிய பெண்ணிடம், 5 சவரன் தாலி செயின் பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

வேப்பூர் அடுத்த ஐவதுகுடியை சேர்ந்தவர் வெங்கடேசன் மனைவி பானுமதி, 32; இவர், நேற்று முன்தினம் இரவு தனது கணவர் மற்றும் பாட்டியுடன் வீட்டில் துாங்கி கொண்டிருந்தார்.

நள்ளிரவில் பானுமதியின் பாட்டி இயற்கை உபாதைக்காக வீட்டின் கதவை திறந்து வைத்துவிட்டு வெளியே சென்றார்.

அப்போது வீட்டிற்குள் பு குந்த மர்ம நபர்கள் துாங்கி கொண்டிருந்த பானுமதியின் கழுத்தில் அணிந்திருந்த 5 சவரன் தாலி செயினை பறித்து சென்றனர். நேற்று அதிகாலை பானுமதி கண் விழித்து பார்த்த போது, கழுத்தில் தாலி செயின் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தகவலின்பேரில் ராமநத்தம் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) செ ல்வநாயகம் விசாரணை நடத்தினார்.

இது குறித்து வேப்பூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement