அட்டகாசமான அரட்டை செயலியை உடனே அப்டேட் செய்யுங்க; பயனர்களுக்கு ஸ்ரீதர்வேம்பு அறிவுறுத்தல்
நமது சிறப்பு நிருபர்
'அரட்டை' சமூக வலைதள செயலியை உடனடியாக அப்டேட் செய்யுமாறு ஸோகோ நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி ஸ்ரீதர் வேம்பு அறிவுறுத்தி உள்ளார். End to End என்கிரிப்ஷன் வசதி செய்யப்பட்டுள்ளது.
மெசேஜிங் செயலிகளில் முன்னணியில் இருப்பது வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் தான். இந்தியாவிலும் பரவலாக இந்த செயலிகளையே மக்கள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். அப்படியிருக்கையில், சாப்ட்வேர் நிறுவனமான ஸோகோ, அரட்டை என்ற மெசேஜிங் செயலி ஒன்றை உருவாக்கி அதனை விஞ்சியது.
சுதேசி செயலியான அரட்டைக்கு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பும் இருந்து வருகிறது. இதனால் பயனர்களுக்கு ஏராளமான அப்டேட்களை அரட்டை செயலில், ஸ்ரீதர் வேம்பு கொண்டு வருகிறார்.
தற்போது அரட்டை செயலியில், End to End என்கிரிப்ஷன் வசதி செய்யப்பட்டுள்ளது. உடனடியாக அப்டேட் செய்யுமாறு ஸோகோ நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி ஸ்ரீதர் வேம்பு அறிவுறுத்தி உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: ப்ளே ஸ்டோர் மற்றும் ஆப் ஸ்டோரில், அரட்டை செயலியை அப்டேட் செய்யுங்கள். இன்று செவ்வாய் இரவு முதல் End to End என்கிரிப்ஷன் வசதி செயல்பாட்டு வரும்.
இந்த அப்டேட் இன்னும் குரூப்பிற்கு செயல்பாட்டுக்கு கொண்டு வரவில்லை. இதனை நாங்கள் சில வாரங்களில் அப்டேட் செய்வோம். இன்னும் பல அருமையான அம்சங்கள் செயல்பாட்டில் உள்ளன. விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். நன்றி.இவ்வாறு ஸ்ரீதர் வேம்பு கூறியுள்ளார்.
என்ட் டு எண்ட் என்க்ரிப்சன் அம்சம் அம்சம் ஏற்கனவே வாட்ஸ் அப் செயலியில் உள்ள நிலையில் தற்போது அரட்டை செயலியிலும் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
தினமலர்
சுதேசி சமூக வலைத்தளமான அரட்டை மொபைல் செயலியில் செய்திகளை வழங்கும் முதல் நாளிதழ் தினமலர். நாளிதழ்கள் மட்டுமின்றி, வார இதழ்கள், தொலைக்காட்சி ஊடக நிறுவனங்களிலும் முதலாவதாக, தினமலர் நாளிதழ் இந்தப் பணியை தொடங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.
தினமலர் அரட்டை சேனல் லிங்க்; https://web.arattai.in/@dinamalar
பி எஸ் என் எல் என்றொரு தரங்கெடட நிறுவனத்தை முடிவிடுங்கள். 100% வேஸ்ட் நிறுவனம். அந்த நிறுவன ஊழியர்கள் அனைவரையும் டிஸ்மிஸ் செய்யுங்கள்.
24 மணி நேரம் இடைவெளிக்கு பிறகு முயற்சி செய்யுங்கள். OTP வரும்.
I cannot the received messages
அந்த அருமையான சங்கதிகளையும் செய்தியில் வேம்பு சொல்லலாமே.
அனைத்து விஷயங்களையும் பொதுவில் சொல்லிவிட முடியாது ........
டவுன்லோட் செய்தபின் OTP வரமாட்டேங்குது. நான் பலமுறை முயற்சி செய்துவிட்டேன்.
தினமலருக்கு இந்திய சுதேசி வாழ்த்துக்கள்.
தினமலருக்கு வாழ்த்துக்கள். ஸ்ரீதர் வேம்பு அவர்களுக்கும் வாழ்த்துக்கள். இந்த செயலியை மக்களிடம் கொண்டு சேர்த்ததில் தினமலரின் பங்கு அளப்பரியது.மேலும்
-
ஸ்ரீசத்யசாய்பாபா நூற்றாண்டு விழா: நாளை சிறப்பு நாணயம் வெளியிடுகிறார் பிரதமர் மோடி
-
10வது முறையாக பீஹார் முதல்வர்; நவ.,20ல் பதவியேற்கும் நிதிஷ்!
-
பயங்கரவாதத்துக்கு எதிராக கண்துடைப்பு நடவடிக்கை கூடாது: ஜெய்சங்கர்
-
பீஹாரில் ரூ.10 ஆயிரம் கொடுத்தது போல தமிழகத்திலும் தர வாய்ப்பு: சீமான்
-
தமிழகத்தில் 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம்; நயினார் நாகேந்திரன் நம்பிக்கை
-
மும்பை வரை நீண்ட டில்லி கார் குண்டுவெடிப்பு வழக்கு; சிக்கிய 3 சந்தேக நபர்களிடம் தீவிர விசாரணை