நீர்நிலை மேலாண்மையில் திருவள்ளூருக்கு தேசிய விருது
திருவள்ளூர்: நீர்நிலையில் தன்னிறைவு பெற்ற பாலாபுரம் ஊராட்சிக்கு, தேசிய அளவில் மூன்றாம் இடத்திற்கான விருது அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த விருதை மத்திய நீர்வள துறை அமைச்சர், திருவள்ளூர் கலெக்டரிடம் வழங்கினார்.
திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்டது பாலாபுரம் ஊராட்சி. வறண்ட பகுதியான இங்கு, நிலத்தடி நீர் தட்டுப்பாட்டால் குடிநீர், விவசாய பணிகளுக்கு தேவையான தண்ணீர் பற்றாக்குறை நிலவி வந்தது.
இதையடுத்து, ஊரக வளர்ச்சி மற்றும் கிராம ஊராட்சி சார்பில், நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரிக்க, பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த ஊராட்சியில், ஏரி, குளம், குட்டை என, 60 நீர்நிலைகள் புனரமைக்கப்பட்டன.
இதன் காரணமாக, இந்த ஊராட்சியில் நிலத்தடி நீர்மட்டம் 30 - -40 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. இதையடுத்து, பாலாபுரம் ஊராட்சி, மத்திய ஜல்ஜீவன் அமைச்சகத்தின், 2024ம் ஆண்டிற்கான ஆறாவது தேசிய விருதில், மூன்றாம் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டது.
புதுடில்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், மத்திய ஜல்ஜீவன் அமைச்சர் பாட்டில், திருவள்ளூர் கலெக்டர் பிரதாப்பிடம் விருதை வழங்கினார். உடன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இயக் குநர் ஜெயகுமார் கலந்து கொண்டார்.
மேலும்
-
ஈமச்சடங்கு பணம் வழங்க லஞ்சம் பெற்ற தாசில்தார் கைது
-
கோவிலில் வகுப்பு நடக்கும் பள்ளியில் அதிகாரிகள் ஆய்வு
-
டில்லி கார் குண்டு வெடிப்பு பயங்கரவாதி சென்னையில் தங்கினாரா என விசாரணை
-
'போக்சோ' வழக்கில் ஆஜராகாத இன்ஸ்பெக்டருக்கு 'பிடிவாரன்ட்'
-
மின் நுகர்வோர்கள் குறைதீர் கூட்டம்
-
ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் டிசம்பரில் முதற்கட்ட ஆய்வு